இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செய்த சத்தியங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு ஏமாந்தவர்கள் பலர். ஒரு இன்சூரன்ஸ் பாலிசி வாங்கும்போது அதில் எந்தெந்த விஷயங்களுக்குக் காப்பீடு வழங்கப்படும், எவற்றுக்குக் காப்பீடு வழங்கப்படாது, எந்தெந்த விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றிக் கட்டாயமாகத் தெரிந்து கொள்வது அவசியம்.
ரூ.7500 கோடி நிராகரிக்கப்பட்ட கிளைம்கள்: பின்னணி தவறு என்ன?
IRDAI வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டு அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 7500 கோடி ரூபாய் மதிப்பிலான கிளைம்களை நிராகரித்துள்ளனர். இதற்கு முக்கியமாக மோசடி அல்லது தவறான ஆவணங்கள் காரணமாக அமைகிறது. இந்தப் பாலிசிகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் காத்திருப்பு காலம், வரம்புகள், விலக்குகள் அல்லது வாடிக்கையாளர்கள் பாலிசியைக் கையெழுத்திடும்போது அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது என்று சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் எமர்ஜென்சி பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரோபோடிக் சர்ஜரி செய்வதுதான் சிறந்த ஆப்ஷன் என்று மருத்துவர் கூறும்போது, ‘இது எங்களுடைய பாலிசியில் கிடையாது’ என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூறி விடுகின்றன. நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை காப்பீடு வழங்க முடியாது என்பதற்கு ‘இது ஏற்கனவே காப்பீடு செய்தவருக்கு இருந்த ஒரு மருத்துவ நிலை’ என்று சொல்லப்படுகிறது.
அறை வாடகை உச்சவரம்பு அதிகமாகி விட்டதால் ICU கிளைம் தொகையில் பாதி மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்றைய காலத்தில் இன்சூரன்ஸ் என்பது ஒரு பொருளைப் போல விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு பாலிசி என்றைக்கும் ஒரு ப்ராடக்ட் ஆகாது. அது ஒரு சத்தியம். இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் பாலிசி பெற்றவர் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்ட ஒரு சத்தியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது வெறும் ஆவணமாக மட்டுமே இருக்கிறது. எனவே இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய சில முக்கியமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
இன்சூரன்ஸ் பெறுபவருக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவப் பிரச்சனைகள்:
பெரும்பாலும் இதற்கான காப்பீடு என்பது காத்திருப்பு காலத்திற்கு உட்பட்டதாக இருக்கும்.
மகப்பேறு பராமரிப்பு:
பெரும்பாலான சமயங்களில் இதற்கான காப்பீடு வழங்கப்படாது. அப்படி வழங்கப்பட்டாலும் கூட அதில் பல்வேறு விதமான வரம்புகள் மற்றும் தாமதங்கள் ஏற்படலாம்.
நவீன சிகிச்சைகள்:
ரோபோடிக்ஸ், அட்வான்ஸ்டு தெரபி அல்லது ஜெனிடிக் டெஸ்டிங் போன்றவை காப்பீட்டில் சேர்க்கப்படாது.
மன நலன்:
பல்வேறு விதமான ஒழுங்கமைப்பு அமல்படுத்தப்பட்ட போதிலும் இதற்கான காப்பீட்டைப் பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்குவது கிடையாது.
அறை வாடகை உச்சவரம்புகள்:
இந்த வரம்பை மீறுவது மொத்த கிளைம் தொகையையும் பாதிக்கும்.
OPD:
- அடிப்படை வெளி நோயாளி செலவுகளுக்கு மொத்தமாக விலக்கு அளிக்கப்படுகிறது.
- ஆனால், இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இவற்றை உங்களால் தவிர்க்க முடியும்.
- எப்பொழுதுமே முழு பாலிசி ஆவணத்தைக் கேளுங்கள், சேல்ஸ் கையேட்டை நம்ப வேண்டாம்.
- முதலில் உங்களுடைய பாலிசியில் எந்தெந்த விஷயங்களுக்குக் காப்பீடு வழங்கப்படாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
- துணை வரம்புகள், காத்திருப்பு காலங்கள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
- ஒவ்வொரு ஆண்டும் பாலிசியைப் புதுப்பிக்கவும்.
- பாலிசி குறித்து குடும்பத்தாருடன் பேசவும், அவசர சூழ்நிலையில் பாலிசி சம்பந்தப்பட்ட செயல்முறைகளில் ஈடுபடுபவர்கள் அவர்கள்தான்.
வெறுமனே காசு கொடுத்து இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது பெரிதல்ல. அதனைப் புரிந்து கொள்ளுங்கள், பல கேள்விகளைக் கேளுங்கள். இவ்வாறு தான் இது செயல்படுகிறது. இன்சூரன்ஸ் என்பது எதற்கும் தயாராக இருப்பதற்கு உங்களுக்கு உதவக்கூடிய ஒன்று, அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
June 13, 2025 10:28 PM IST

