ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கின் அருகே தண்ணீரில் ஆபத்தான முறையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரை கடலோர காவல்படை போலீசார் மீட்டனர்.
நேற்று ஜூன் 12 அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் (SCDF) காலை கிட்டத்தட்ட 8:10 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மீட்கப்பட்ட 63 வயது நபருக்கு சிறிய காயங்கள் இருந்ததாகவும், இதனால் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்துவிட்டதாகவும் போலீசார் கூறினர்.
படகு மூலம் அவர் காப்பாற்றப்பட்டார்
இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நம்மால் காண முடிந்தது, கரையிலிருந்து சிறிது தொலைவில் தண்ணீரில் ஆடவர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதை காணொளி காட்டுகின்றன.
அவர் படகுத் துறைக்கு அருகில் உள்ள கான்கிரீட் கட்டமைப்பின் விளிம்பில் தொங்கி கொண்டும், உதவி வேண்டி தத்தளிப்பது போலவும் தெரிகிறது.
இதனை அடுத்து, கடலோர காவல்துறையினர் ஆடவரும் உயிர்காக்கும் மிதவையை வீசி அவரை படகை நோக்கி இழுப்பதையும் அதில் காண முடிந்தது.
இந்த மீட்புப் பணியை காண மக்கள் கூட்டமும் அங்கு கூடியிருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆடவர் ஏன் அங்கு மாட்டிக்கொண்டார், அவர் யார் என்ற எந்த தகவலையும் கடலோர காவல்துறை வெளியிடவில்லை.
Photo: Mothership reader

