இன்று அதிகாலை (ஜூன் 13) இஸ்ரேல் ஆப்ரேஷன் “Rising Lion’ என ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த வான்வெளித் தாக்குதலில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், ராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாக்குதலால் ஈரானின் உயர் ராணுவ அதிகாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஈரானின் முக்கியமான அணு ஆயுத ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல அறிவியல் ஆராய்ச்சியாளர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

