• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

90 பந்துகளில் 190 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி… இங்கிலாந்து செல்வதற்கு முன் செய்த தரமான சம்பவம்

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
90 பந்துகளில் 190 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி… இங்கிலாந்து செல்வதற்கு முன் செய்த தரமான சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 12, 2025 12:17 PM IST

14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2025 இல் 35 பந்துகளில் சதம் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது 90 பந்துகளில் 190 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறார்.

வைபவ் சூர்யவன்ஷிவைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

ஐபிஎல் 2025 இல் தனது புயல் பேட்டிங்கின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, இப்போது 90 பந்துகளில் 190 ரன்கள் எடுத்துள்ளார். 14 வயதான வைபவ் ஐபிஎல் தொடருக்கு பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகிறார். பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து செல்வதற்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் அவர் 200 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்தார்.

வைபவ் சூரியவன்ஷி இந்திய கிரிக்கெட் உலகில் 12 வயதிலிருந்தே தனது முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார். ரஞ்சி டிராபியில் இளைய அறிமுக வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஆனால் 2025 ஐபிஎல் போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்தபோது, ​​உலகம் முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிய தொடங்கியது.. இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இந்த இன்னிங்ஸை விளையாடினார். ஐபிஎல்லில் இளைய வயதில் சதம் அடித்த சாதனையும் இதுதான்.

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணி ஜூன் 24 முதல் ஜூலை 23, 2025 வரை இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி இந்த காலகட்டத்தில் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், இரண்டு நான்கு நாள் போட்டிகளிலும் புரவலன் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும். இது தவிர, 50 ஓவர்கள் கொண்ட பயிற்சி போட்டியும் நடைபெறும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வைபவ் சூர்யவன்ஷி தனது கேப்டன் ஆயுஷ் மத்ரேவுடன் இன்னிங்ஸைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே NCA-வில்  நடந்த பயிற்சி போட்டியில், வைபவ் சூரியவன்ஷி தான் எந்த பாணியில் முத்திரை பதித்தாரோ அதே பாணியைக் காட்டினார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சிப் போட்டியில் வைபவ் லாங்-ஆன் மற்றும் மிட்விக்கெட்டில் லாங் சிக்ஸர்களை அடித்தார். இது மட்டுமல்லாமல், பாயிண்டிற்கு மேலே ஒரு சிக்ஸரையும் அடித்தார். அவரது இன்னிங்ஸின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் வைபவ் 90 பந்துகளில் 190 ரன்கள் விளாசி மீண்டும் அனைவரது பார்வையும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.

First Published :

June 12, 2025 12:07 PM IST

Read More

Previous Post

நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம்.. 25 ஊழியர்களுக்கு கார்கள் வழங்கிய அஜிலிசியம் நிறுவனம்

Next Post

UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு இனி கட்டணமா…? நிதி அமைச்சகம் சொல்வது என்ன…?

Next Post
UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு இனி கட்டணமா…? நிதி அமைச்சகம் சொல்வது என்ன…?

UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு இனி கட்டணமா...? நிதி அமைச்சகம் சொல்வது என்ன...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin