Last Updated:
மொத்தம் 242 பேர் பயணித்த விமானத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உள்ளது. விபத்தில் சிக்கி விமானத்தின் பல பகுதிகளில் உருத்தெரியாமல் சிதைந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் விமானம் விழுந்து நொறுங்கியதில் கரும்புகை வெளியேறி வருகிறது. விமான விபத்தைத் தொடர்ந்து, ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டன் புறப்பட்டுச் சென்ற நிலையில், புறப்பட்ட 10 நிமிடங்களில் விமானம் விழுந்து நொறுங்கியது. மதியம் 1.39 விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 வகையைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது. விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்த நிலையில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். லண்டன் செல்லும் வகையில் இந்த விமானத்தில் விஜய் ரூபானி பயணித்த நிலையில், விபத்தில் சிக்கினார். தொடர்ந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விஜய் ரூபானி உயிரிழந்திருக்கலாம் என்று அச்சப்படும் நிலையில் அவரின் கடைசி புகைப்படம் வெளியாகியுள்ளது.
Vijay Rupani
விமானத்தில் உட்கார்ந்திருந்த அவரை சக பயணி செல்பி புகைப்படமாக எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மொத்தம் 242 பேர் பயணித்த விமானத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உள்ளது. விபத்தில் சிக்கி விமானத்தின் பல பகுதிகளில் உருத்தெரியாமல் சிதைந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
June 12, 2025 5:21 PM IST


