• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Credit Card Billing Cycle: கிரெடிட் கார்ட் பில்லிங் சைக்கிள் எப்படி கணக்கிடப்படுகிறது?

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Credit Card Billing Cycle: கிரெடிட் கார்ட் பில்லிங் சைக்கிள் எப்படி கணக்கிடப்படுகிறது?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரெடிட் கார்டு பில்லிங் சைக்கிள் என்றால் என்ன?

நிதி நிறுவனம் பில்லிங் சைக்கிள் என்பதை உங்களுடைய கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட அனைத்து டிரான்சாக்ஷன்கள் உருவாக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்ட ஒரு கால அளவாக வரையறுக்கிறது. வழக்கமாக இந்த பில்லிங் சைக்கிள் என்பது 28 முதல் 31 நாட்கள் வரை, குறிப்பிட்ட அந்த நிதி நிறுவனத்தைப் பொறுத்து அமையும். இந்த பில்லிங் சைக்கிளின் முடிவில் உங்களுடைய கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்டை நீங்கள் பெறுவீர்கள். அதில் பின்வரும் விவரங்கள் அடங்கும்:

*நீங்கள் பெற்ற அனைத்து கேஷ் அட்வான்ஸ் தொகைகள், EMIகள், பேமெண்ட்கள் போன்றவை

*நீங்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை மற்றும் மொத்த தொகை

*பேமெண்ட் செலுத்துவதற்கான கடைசி தேதி

பில்லிங் சைக்கிளைச் சரியாகப் புரிந்துகொள்வதன் மூலமாக நீங்கள் சிறந்த முடிவுகளை எடுத்து, பேமெண்ட்களைச் சரியாக நிர்வகித்து, வீணாக வட்டி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கிரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்ட் vs டியூ தேதி: இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு

பேமெண்ட் சைக்கிளின் இறுதியில் உங்களுடைய கிரெடிட் கார்டு வழங்குநர் பில்லை உருவாக்கும் தேதியானது உங்களுடைய ஸ்டேட்மெண்ட் தேதியாக அமைகிறது. அதே சமயத்தில் டியூ தேதி என்பது குறிப்பிட்ட அந்த தேதிக்குள் நீங்கள் பேமெண்ட்களைச் செலுத்தாவிட்டால் அபராதங்கள் அல்லது வட்டி தொகையைச் செலுத்த வேண்டி இருக்கும். இந்த இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட காலம் என்பது வழக்கமாக 12 முதல் 21 நாட்கள் சலுகைக் காலமாக வழங்கப்படும். எனவே இந்த கால வரம்புக்குள் உங்களுடைய கிரெடிட் கார்டு பேமெண்டைச் செலுத்தி விட்டால் நீங்கள் எந்தவிதமான வட்டியையும் செலுத்தத் தேவை இருக்காது.

கிரெடிட் கார்டு பில்லிங் சைக்கிள் வட்டி இல்லா கால அவகாசத்தை எப்படிப் பாதிக்கிறது?

  1. கிரெடிட் கார்டு வழங்குநர் உங்களுக்குக் கொடுக்கும் வட்டியில்லா கால அளவை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, உங்களுடைய சைக்கிள் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை இயங்குவதாக வைத்துக் கொள்வோம். இதற்கான தேதி என்பது ஜூலை
  2. அப்படி இருக்கும்போது ஜூலை 1 தேதியில் நீங்கள் செய்யும் பேமெண்ட்கள் அனைத்தும் அடுத்த பில்லிங் சைக்கிளில் பதிவு செய்யப்படும் மற்றும் அந்த தொகையானது ஆகஸ்ட் 20க்கு முன் டியூவாகக் காண்பிக்கப்படாது. எனவே உங்களுடைய வட்டி இல்லாத கடன்காலத்தை நீங்கள் 50 நாட்களாக அதிகரித்துள்ளீர்கள். எனவே கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை அதிகரிப்பதற்கு ஒரு புதிய பில்லிங் சைக்கிள் துவங்கும் சமயத்தில் பெரிய அளவிலான பேமெண்ட்களைச் செலுத்துவது புத்திசாலித்தனமாக இருக்கும்.

கிரெடிட் கார்டு பேமெண்ட் டியூ தேதிக்குள் செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?

டியூ தேதியைத் தவறவிட்டால் பின்வரும் விளைவுகள் ஏற்படும்:

*தாமதமாகப் பேமெண்ட் செலுத்தியதற்கான கட்டணங்கள்.

*வட்டி விகிதங்கள் (வழக்கமாக 36 முதல் 48 சதவீதம் ஆண்டுவாரியான வட்டி வசூல் செய்யப்படும்).

*உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையான தாக்கம்.

*எதிர்காலத்தில் வட்டி இல்லா கால அவகாசம் கிடைக்காமல் போகலாம்.

உங்களுடைய கிரெடிட் கார்டு பில்லிங் சைக்கிளை ஸ்மார்ட்டாக நிர்வகிப்பதற்கு சில டிப்ஸ்:

*காலண்டர் அலர்ட்டுகள் அல்லது ஆட்டோ டெபிட் ஆப்ஷனை எனேபிள் செய்வதன் மூலமாக இந்தச் சூழ்நிலையை நீங்கள் தவிர்க்கலாம்.

*ஒரு புதிய பில்லிங் சைக்கிள் ஆரம்பிக்கும் போது பெரிய பேமெண்ட்களை உடனடியாகச் செலுத்துங்கள்.

*வட்டி செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு டியூ தேதிக்கு முன்பு உங்களுடைய மொத்த பேலன்ஸையும் செலுத்தி விடவும்.

*உங்களுக்கு வழங்கப்பட்ட கடனில் 30 சதவீதத்திற்கும் குறைவாகப் பயன்படுத்தவும்.

*ஒவ்வொரு மாதமும் உங்களுடைய கிரெடிட் கார்ட் ஸ்டேட்மெண்ட்டை ஆய்வு செய்து, தேவையில்லாத செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும்.

*அடிக்கடி கிரெடிட் கார்டு என்கொயரி செய்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கலாம்.

எனவே பில்லிங் சைக்கிள் என்பது தேதிகளின் ஒரு பட்டியல் என்பதையும் தாண்டி இது உங்களுடைய கடனை நிர்வகிப்பதற்கு, புத்திசாலித்தனமாகச் செலவு செய்வதற்கு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக அதிகபட்ச பலன்களைப் பெறுவதற்கான ஒரு மூலம். கிரெடிட் கார்டை முழுமையாகப் புரிந்துகொண்டால் அதனை நீங்கள் எளிமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

First Published :

June 12, 2025 9:30 AM IST

Read More

Previous Post

தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸி. சுருண்டதில் வியப்பு ஏதுமில்லை… ஏன்? | No wonder that australia crushed by South Africa explained

Next Post

India – America: “பயங்கரவாதத்துக்கு எதிராக இருக்கும் பாகிஸ்தானின் நட்பும் தேவை” – அமெரிக்க தளபதி

Next Post
India – America: “பயங்கரவாதத்துக்கு எதிராக இருக்கும் பாகிஸ்தானின் நட்பும் தேவை” – அமெரிக்க தளபதி

India - America: ``பயங்கரவாதத்துக்கு எதிராக இருக்கும் பாகிஸ்தானின் நட்பும் தேவை'' - அமெரிக்க தளபதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin