படிவம் 16 மற்றும் படிவம் 16A ஆகியவை TDS என்று சுருக்கமாக அழைக்கப்படும் டேக்ஸ் டிடக்ஷன் அட் சோர்ஸ் என்பதற்கான முக்கியமான சான்றிதழ்களாகக் கருதப்படுகின்றன. வருமான வரி சட்டத்தின் கீழ், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் அல்லது வரி பிடித்தம் செய்யும் நிறுவனமானது வரி செலுத்துவோருக்கு இதனை வழங்குகிறது. எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனமோ அல்லது பிற நிறுவனமோ உங்களிடம் இருந்து பிடித்தம் செய்த வரியை அரசுக்கு டெபாசிட் செய்கிறது. உங்களுடைய வருமானம் அல்லது சம்பளத்திலிருந்து எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது என்பதற்கான நிரூபணமாக இந்த TDS சான்றிதழ் அமைகிறது.
படிவம் 16ல் என்ன மாதிரியான தகவல்கள் இருக்கும்?
TDSஆக பிடித்தம் செய்யப்பட்ட வரி சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் படிவம் 16ல் இடம்பெற்றிருக்கும். அதில் பின்வரும் விவரங்கள் அடங்கும்…

சான்றிதழ் எண்:
இது ஒரு தனித்துவமான அடையாள எண்.
TRACES வாட்டர் மார்க்:
சான்றிதழானது TRACES (TDS Reconciliation Analysis and Correction Enabling System) போர்ட்டலில் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்கிறது.
காலாண்டு வாரியாக TDS ஸ்டேட்மெண்ட்:
ஒவ்வொரு காலாண்டிலும் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டது மற்றும் அரசிடம் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டது என்பதற்கான விரிவான தகவல்.
ஊழியரின் PAN மற்றும் நிறுவனத்தின் TAN:
ஊழியரின் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர் மற்றும் நிறுவனத்தின் டேக்ஸ் டிடக்ஷன் அண்ட் கலெக்ஷன் அக்கவுண்ட் நம்பர் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.
சம்பள விவரங்கள்:
நிறுவனம் ஊழியருக்கு வழங்கிய சம்பளத்தின் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் அடிப்படை சம்பளம், சலுகைகள் போன்றவை அடங்கும்.
கிளைம் செய்யப்பட்ட டிடக்ஷன்:
வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80C என்பது D அல்லது பிற பிரிவுகளின் கீழ் ஊழியர் ஏதாவது டிடக்ஷனை கிளைம் செய்திருந்தால், அது சம்பந்தப்பட்ட விவரங்களும் இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
படிவம் 16ன் இரண்டு பகுதிகள்:
படிவம் 16ல் இரண்டு பகுதிகள் உள்ளன. பார்ட் A மற்றும் பார்ட் B ஆகும்.
பார்ட் A:
இது TDSஇன் சுருக்கத்தைக் கொண்டிருக்கும். இதில் நிறுவனத்தின் TAN, ஊழியரின் PAN மற்றும் காலாண்டு வாரியாக பிடித்தம் செய்யப்பட்ட TDS தகவல் மற்றும் நிறுவனம் டெபாசிட் செய்த தொகை போன்றவை அடங்கும்.
பார்ட் B:
ஊழியருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தின் விவரங்கள் மற்றும் டிடக்ஷன்கள் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். பிரிவு 80Cன் கீழ் செய்த முதலீடுகள், ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் (HRA) போன்றவை இதில் அடங்கும்.
ITR தாக்கல் செய்யும்போது:
உங்களுடைய TDS அல்லது TCS பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், ITR தாக்கல் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். உங்களுக்கான படிவம் 16 அல்லது 16A வரும் வரை காத்திருக்கவும். மேலும், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் படிவம் 26ASல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
படிவம் 16A எங்கு கொடுக்கப்பட்டிருக்கும்?
வட்டி, கமிஷன் அல்லது ஃபிக்சட் டெபாசிட்களுக்கான ரிட்டன் போன்றவற்றை வரி செலுத்துவோர் பெறும் போது, குறிப்பிட்ட அந்த வங்கி அல்லது நிறுவனமானது படிவம் 16Aஐ வரி செலுத்துவோருக்கு வழங்கும்.
June 12, 2025 7:30 AM IST
ITR Filing 2025: ITR தாக்கல் செய்யப் போறீங்களா? படிவம் 16, 16A எப்படி பயன்படுத்துவது? இங்கே தெரிஞ்சுக்கோங்க!

