• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுடிடி சீசன் 6: புனேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் கால் பதித்தது ஜெய்ப்பூர் அணி! | ultimate table tennis season 6 jaipur beat pune to enter playoffs

GenevaTimes by GenevaTimes
June 12, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுடிடி சீசன் 6: புனேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் கால் பதித்தது ஜெய்ப்பூர் அணி! | ultimate table tennis season 6 jaipur beat pune to enter playoffs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-ல் புதன்கிழமை அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாக அமைந்திருந்தது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அனிர்பர்கோஷ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திராவுடன் மோதினார். இதில் இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஜீத் சந்திரா 2-1 (11-8, 11-9, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ரீத் ரிஷ்யா, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் (நெதர்லாந்து) பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட் 2-1 (11-9, 11-6, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் ரீத் ரிஸ்யா, அல்வாரோ ரோபிள்ஸ் (ஸ்பெயின்) ஜோடியானது, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடியுடன் மோதியது. இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடி 2-1 (9-11, 11-6, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிக்கு எதிரான டையில் 6-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி. 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அல்வாரோ ரோபிள்ஸ் (ஸ்பெயின்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் யஷான்ஷ் மாலிக்குடன் மோதினார். இதில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அல்வாரோ ரோபிள்ஸ் 2-1 (11-4, 6-11, 11-3) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணி 5-7 என நெருங்கி வந்தது.

கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் ஸியோன் லீ (தென் கொரியா), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஸ்ரீஜா அகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டை ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலா 11-5 என கைப்பற்றினார். இதன் மூலம் பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிக்கு எதிரான டையை 8-5 தன்வசப்படுத்தியது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி. 2-வது செட்டை ஸியோன் லீ 11-6 என கைப்பற்றினார். எனினும் அடுத்த செட்டை ஸ்ரீஜா அகுலா 11-8 என வென்றார்.

முடிவில் ஸ்ரீஜா அகுலா 2-1 (11-5, 6-11, 11-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஒட்டுமொத்தமாக பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணிக்கு எதிரான டையில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 9-6 என வெற்றி பெற்றது. ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 5 டையில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி ஒட்டுமொத்தமாக 16 ஆட்டங்களில் வெற்றி பெற்று 41 புள்ளிகளுடன் 3-வது அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்துள்ளது. ஏற்கெனவே நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ், தபாங் டெல்லி டிடிசி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.

பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணி 33 புள்ளிகளுடன் லீக் சுற்றை நிறைவு செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. யுடிடி சீசன் 6-ல் ஜூன் 12 (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் யு மும்பா டிடி – தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதுகின்றன.



Read More

Previous Post

கொலையுண்ட சகோதரன்; தவித்து நின்ற மணப்பெண்…! உதவிக்கரம் நீட்டிய உத்தரப்பிரதேச காவல்துறை

Next Post

Tamilmirror Online || ஜனாதிபதி அநுர

Next Post
Tamilmirror Online || ஜனாதிபதி அநுர

Tamilmirror Online || ஜனாதிபதி அநுர

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin