வங்கதேச நாட்டிலுள்ள நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள, நோபல் பரிசுப்பெற்ற வங்காள மொழி எழுத்தாளர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லம் தற்போது அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கடந்த ஜூன் 8 ஆம் தேதியன்று, அந்த அருங்காட்சியகத்துக்கு, ஒரு நபர் தனது குடும்பத்துடன் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, வாகன நிறுத்துமிடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம் தொடர்பாக அந்நபருக்கும், அங்குப் பணிப்புரியும் ஊழியருக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த நபர் அங்குள்ள அலுவலக அறையில் அடைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அருங்காட்சியக நிர்வாகிகளுக்கு எதிராக, கடந்த ஜூன் 10 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

