அதன்படி, ICICI வங்கியில் 7 முதல் 45 நாட்கள் கால அளவு கொண்ட டெபாசிட்டுகளுக்குப் பொது சிட்டிசன்களுக்கு 3 சதவீத வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 3.50 சதவீத வட்டியும் இனி வழங்கப்படும். மேலும், 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான கூடுதல் கால அளவுகளுக்கு இந்த வட்டி விகிதமானது 4 சதவீதம் மற்றும் 4.5% என முறையே வழங்கப்படும். 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரையிலான குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வழக்கமான கஸ்டமர்கள் 4.50 சதவீத வட்டியையும், சீனியர் சிட்டிசன்கள் 5% வட்டியையும் பெறுவார்கள்.


