தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்காத கருவிழிப் பதிவு:
இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருவிழிப் பதிவு சரியாகப் பதியாததால், நியாய விலைக்கடையில் இருக்கும் பொருட்களை வாங்கமுடியவில்லை என மக்கள் புலம்பினர். குறிப்பாக, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் கருவிழி மூலம் பதிந்து, நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர்.

