அவள் கைகளை நீட்டி, அவனது கைகளைப் பிடிக்க முயல்கிறாள். ஆனால் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு அவர்களைப் பிரித்துவிடுகிறார்கள்.
கனவிலிருந்து எழுந்து, “தயவுசெய்து, என்னைக் காப்பாற்றுங்கள்!” எனக் கத்துகிறாள். அது வெறும் கனவென்று புலப்ப்பட்டது. கோப்பையில் மதுவை ஊற்றிக் குடித்துவிட்டு, அந்தக் கனவு உரைத்த தரிசனத்தை அறியாமல் எழுந்து வந்து, வெளியே எட்டிப் பார்க்க கதவைத் திறந்தாள்.
மழை பெய்து நின்று நிலம் இன்னும் ஈரமாக இருந்தது. முன்தினம் புத்துணர்ச்சியோடும், உயர்ந்தும் இருந்த பூக்கள் இப்போது மௌனமாக வாடி, சேதமடைந்து தரையில் கிடந்தன.
தரை சிவப்பு போர்வையால் மூடப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் புயலின் சீற்றம். பூக்கள் வாடி, மஞ்சள் நிறக் கிளைகள் உயரம் குறைந்து காற்றில் ஊசலாடின.
நேற்றிரவு சூறைக்காற்றுப் பலமாக வீசியது.
அதிகாலை குளிர்காற்று என்னைத் தீண்டவில்லை
இரவு நான் அதிகமாகக் குடித்திருந்ததால்
என்னுடைய பணிப்பெண்ணிடம் கேட்டேன்
கதவை யார் மூடியது?
தோட்டமெல்லாம் சோகமாகக் காட்சியளிக்கிறது
சீன கிராப் ஆப்பிள் மலர்கள்
இன்னும் பூத்துக்கொண்டிருக்கின்றன
யாருக்குத் தெரியும்? யாருக்குத் தெரியும்?
இலைகள் பசுமையாக இருந்திருக்க வேண்டும்
பூவிதழ்கள் சிவப்பு நிறத்தில் இருந்திருக்க வேண்டும்

