இந்தியாவின் கேரள கடற்கரைப் பரப்பில் அமைந்துள்ள அரபிக் கடலில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது.
தைவானை சேர்ந்த கொள்கலன் கப்பல் நிறுவனமான வான் ஹை லைன்ஸ் (Wan Hai Line) நிறுவனத்தின் Wan Hai 503 என்ற சரக்குக் கப்பல், இலங்கையின் கொழும்பிலிருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்ததது.
இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நாடு
அந்த கப்பலில் இருந்த கொள்கலன் ஒன்று வெடித்ததாகவும் அதனால் தீ மூண்டதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, வான்வழி கண்காணிப்பின் உதவியுடன் தீயணைப்பு பணிகள் மற்றும் ஊழியர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) கொடுத்த புதுப்பிப்புகள் தெரிவித்தன.
22 ஊழியர்களில் 18 பேர் மீட்பு
அந்த கப்பலின் 22 ஊழியர்கள் சென்றதாகவும், அதில் 18 பேர் மீட்கப்பட்டு இந்தியாவின் நியூ மங்களூர் துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கப்பலில் பயணித்தவர்களில் யாரும் சிங்கப்பூரர்கள் இல்லை என்று MPA குறிப்பிட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள்
அதில் தைவானைச் சேர்ந்த இருவர், மியான்மரைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் என நான்கு ஊழியர்களை இன்னும் காணவில்லை.
காயமடைந்த ஆறு ஊழியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர், அதில் மூன்று பேர் சிகிச்சை முடிந்து வெளியேற்றப்பட்டனர்.
கூடுதலாக, தற்போது நிலவி வரும் பருவமழை காரணமாக தீயை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கடலில் விழுந்த 20 கொள்கலன்கள்
அந்த சரக்கு கப்பல் கிட்டத்தட்ட 650 கொள்கலன்களை ஏற்றி சென்றதாகவும், அதில் 20 கொள்கலன்கள் கடலில் விழுந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடரும் பணி
இந்திய அதிகாரிகளுக்கு உதவ குழு ஒன்றை MPA நியமித்துள்ளது என்றும், அவர்களுடன் நெருக்கமான பணியாற்றி நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.
MRT ரயிலில் தொடர்ந்து பெண்களிடம் தகாத முறையில் நடந்து வந்த ஆடவர் கைது

