இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என சில நாடுகள் அவ்வப்போது அறிவிப்பை வெளியிடுவதை நாம் அறிந்தது தான்.
அதில் ஒன்றாக, இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பை தற்போது பிலிப்பைன்ஸ் வெளியிட்டுள்ளது.
லாரி மோதி ஊழியர் பரிதாப மரணம் – “வேலைக்கு சேர்ந்து 8 மாசம் தான் ஆகுது” – வெளிநாட்டு ஓட்டுநர் கைது
இந்தியர்கள் 14 நாட்கள் (நீட்டிக்க முடியாத மற்றும் மாற்ற முடியாத) விசா இல்லாமல் பிலிப்பைன்ஸுக்குள் தங்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.
அங்கு செல்பவர்களுக்கு, குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட், ஹோட்டல் தங்குமிடம்/முன்பதிவு சான்றிதழ், போதுமான நிதி இருப்பு குறித்த சான்று மற்றும் மீண்டும் நாட்டிற்குத் திரும்ப டிக்கெட் ஆகியவை கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சுற்றுலா வருகையை மேம்படுத்துவதே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம் என கூறப்பட்டுள்ளது.
அதே போல 30 நாட்கள் விசா இல்லாமல் தங்கும் அறிவிப்பும் இந்தியர்களுக்கு வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஷெங்கன், சிங்கப்பூர் அல்லது பிரிட்டன் ஆகிய நாடுகளின் செல்லுபடியாகும் மற்றும் தற்போதைய விசாக்கள் வைத்திருப்போர் அல்லது நிரந்தர குடியிருப்பு அனுமதிகளை (Residence Permits) வைத்திருக்கும் இந்திய நாட்டவர்கள், 30 நாட்கள் விசா இல்லாமல் பிலிப்பைன்ஸுக்குள் நுழையலாம்.
இதற்கும் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட், நாட்டிற்கு மீண்டும் திரும்ப டிக்கெட் ஆகியவை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் திருட்டு: 2 இந்திய நாட்டவர்கள் கைது

