Last Updated:
உலகில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இந்த கேபி லேம் இருப்பதாக பல ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன
சமூக வலைதளங்களில் 162 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட பிரபலம் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளமாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த செயலியை சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியர்களுடைய தகவல்கள் திருடப்பட்டு தவறான வழிகளில் பயன்படுத்தப்படலாம் என்றும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும் டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த டிக் டாக் செயலி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இதில், கேபி லேம் என்பவர் 162 மில்லியன் பாலோயர்ஸ் பெற்றிருக்கிறார். 25 வயதாகும் இவரது சொந்த நாடு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் ஆகும். இருப்பினும், இவர் இத்தாலிய குடியுரிமை பெற்றிருக்கிறார். கொரோனா காலத்தின் போது ஏராளமான சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டு இவர் பிரபலம் அடைந்திருக்கிறார்.
உலகில் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இந்த கேபி லேம் இருப்பதாக பல ஆய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில் கேபி லேம் குடியுரிமை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் கடந்த வெள்ளி அன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அதாவது, விசா முடிந்த பின்னரும் அமெரிக்காவில் தங்கி இருந்த காரணத்தினால் அவரை கைது செய்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதன் பின்னர், அவர் சுய விருப்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற சம்மதித்ததைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
June 10, 2025 9:27 PM IST


