• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்தியப் படைகளின் வீரத்தை அரசியலாக்க மோடியும் பாஜகவும் முயற்சி” – மம்தா பானர்ஜி சாடல் | bjp politicising bravery of forces says mamata banerjee on pahalgam terror attack

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
“இந்தியப் படைகளின் வீரத்தை அரசியலாக்க மோடியும் பாஜகவும் முயற்சி” – மம்தா பானர்ஜி சாடல் | bjp politicising bravery of forces says mamata banerjee on pahalgam terror attack
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிப்பதாக அவர் சாடினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு தவறியதற்காக பாஜக அரசு, ராஜினாமா செய்ய வேண்டும். இந்தக் கொடூரமான தாக்குதல் நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் தோல்வியை அம்பலப்படுத்துகிறது. நமது வீரர்கள் ஒப்பிடமுடியாத துணிச்சலைக் காட்டிய போதிலும், மீண்டும் மீண்டும் நிகழும் பாதுகாப்பு மீறல்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது?

26 பொதுமக்கள், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினரோ அல்லது காவல் துறையினரோ ஏன் இல்லை? ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது ஆயுதப்படைகளின் வீரத்தைப் பாராட்டி சட்டமன்றத்தில் நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். எனினும் அப்போது இது குறித்து தீர்மானத்தில் நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. அதற்கு மதம், சாதி இல்லை.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆயுதப் படைகளின் வீரத்தை அரசியலாக்க முயற்சிக்கின்றன. பிரதமர் மோடி தன்னைப் பற்றி விளம்பரப்படுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த ராணுவ மோதலின் போது, ​​பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) இந்தியா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது” என தெரிவித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். ஒரு தேசிய துயரத்தை முதல்வர் அரசியலாக்குவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.



Read More

Previous Post

Tamilmirror Online || பொலிஸாரை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்

Next Post

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் : கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Next Post
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் : கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் : கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin