ஒஸ்ரிய(austria) நாட்டில் உயர்தர பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் துப்பாக்கி சூட்டை நடத்தியவர் பாடசாலை கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது.
தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் படுகாயம்
இருப்பினும் விவரங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது. சிறப்புப் பிரிவுகள் உட்பட சம்பவம் நடந்த இடத்தில் பாரிய காவல்துறை பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

