சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு (Migrant domestic workers) முக்கிய அறிவிப்பை மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ளாத இளம் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வேலை பார்க்கும் பணிப்பெண்களுக்கு தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி தேவை என்று அமைச்சகம் கூறியுள்ளது.
தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி முக்கியம்
அதாவது, அந்த நோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தை இருந்தால், அவர்களுக்காக வேலை செய்யும் பணிப்பெண்கள் தட்டம்மை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக இருப்பதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த புதிய கட்டாய நடைமுறை வரும் செப்டம்பர் முதல் நடப்புக்கு வரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அல்லது புதுப்பிப்பு ஒர்க் பெர்மிட்களுக்கு (Work permit) கட்டாயம்
செப்டம்பர் 1 முதல், வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு புதிதாக ஒர்க் பெர்மிட் (Work permit) அனுமதி விண்ணப்பிக்கும் போது அல்லது ஏற்கனவே வேலையில் இருக்கும் பணிப்பெண்களுக்கு ஒர்க் பெர்மிட்டை புதுப்பிக்கும் போது, அவர்கள் தட்டம்மை நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவரா அல்லது தட்டம்மைக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெற்றாரா என்பதை முதலாளிகள் தெரிவிக்க வேண்டும்.
அதாவது, மேற்கூறியது போல வீட்டில் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் முதலாளிகள் மட்டுமே அவ்வாறு செய்ய வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர்களை கூடுதலாக வேலைக்கு எடுக்க அனுமதி – ஓட்டுனர்கள் பெரும் மகிழ்ச்சி
முதலாளிகள் கடமை
வீட்டிலுள்ள தங்கள் குழந்தைக்கு தட்டம்மை நோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதா அல்லது பணிப்பெண்ணுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்றால் தடுப்பூசிக்கு போட முன்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் முதலாளிகள் தெரிவிக்க வேண்டியிருக்கும் என்றும் MOM கூறியது.
இவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை
அதே போல, வீட்டில் ஏழு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முழுமையாக தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டிருந்தாலோ அல்லது பணிப்பெண்ணுக்கு ஏற்கனவே தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி இருந்தாலோ அவருக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை.
கடந்த காலத்தில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது தடுப்பூசி போடப்பட்டு இருந்தாலோ அவர்களுக்கு தட்டம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
ஆதார சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்
தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ், ஆய்வக சோதனை முடிவுகள் அல்லது கடந்த கால தொற்றுக்கான ஆய்வக உறுதி சான்றிதழ் போன்ற ஆதாரத்தை முதலாளிகள் மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கலாம்.
தடுப்பூசி செலவுகளை முதலாளிகளே ஏற்க வேண்டும்
தட்டம்மைக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற பணிப்பெண்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
இரண்டு டோஸ்களின் விலை சுமார் $80 வெள்ளி முதல் $140 வெள்ளி வரை இருக்கும்.
அதற்கான செலவுகளை முதலாளிகளே ஏற்க வேண்டும்.
தவறும் முதலாளிகளுக்கு…
தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி தேவை இருந்தும் நோய் அதனை சரிசெய்யாத முதலாளிகளின் ஒர்க் பெர்மிட் சலுகை நிறுத்தி வைக்கப்படும்.
அதாவது தடுப்பூசி போட்டதற்கான முறையான சான்று வழங்கப்படும் வரை அவர்களின் ஒர்க் பெர்மிட் சலுகைகள் நிறுத்தி வைக்கப்படலாம்.
புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு

