• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“போதை பொருள் கொடுத்து…” – ஹனிமூன் வழக்கில் சோனம் கொடுத்த வாக்குமூலம் – அம்பலமான உண்மை

GenevaTimes by GenevaTimes
June 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“போதை பொருள் கொடுத்து…” – ஹனிமூன் வழக்கில் சோனம் கொடுத்த வாக்குமூலம் – அம்பலமான உண்மை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 10, 2025 11:16 AM IST

ராஜா குஷ்வாஹா என்பவரை சோனம் காதலித்து வந்ததும், ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்த பிறகும் அவருடன் தொலைபேசியில் பேசியதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சோனம்கைது செய்யப்பட்ட சோனம்
கைது செய்யப்பட்ட சோனம்

கணவனை மேகாலாயாவிற்கு தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கில் கைதான சோனம், தனக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும், உத்தரப்பிரதேசத்தின் காசிபூருக்கு யாரோ அழைத்து வந்து விட்டதாகவும் காவல்துறையினரிடம் அப்பாவி போல் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ராஜா ரகுவன்ஷி – சோனம் ஆகியோர் தேனிலவுக்காக கடந்த 20 ஆம் தேதி மேகாலாயாவுக்குச் சென்றனர். அதன் பின்னர் இருவரும் காணவில்லை என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தம்பதி காணாமல் போன 10 நாட்களுக்குப் பிறகு கடந்த 2 ஆம் தேதி, அவர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் ராஜா ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சோனம் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியது காவல்துறை. ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் சோனம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

காவல்துறை அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, ராஜா குஷ்வாஹா என்பவரை சோனம் காதலித்து வந்ததும், ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்த பிறகும் அவருடன் தொலைபேசியில் பேசியதும் தெரியவந்தது. திருமணம் முடிந்து நான்கு நாட்களுக்குப் பின் தனது தாய் வீட்டிற்குத் திரும்பிய சோனம் அங்குதான் கணவனை கொலை செய்யத் திட்டம் தீட்டியதும் அம்பலமானது.

ஆனால் கணவனை கொலை செய்ததை மறைக்கும் விதமாக தனக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதாகவும், மேகாலாயாவில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் காசிபூருக்கு யாரோ அழைத்து வந்துவிட்டதாகவும் சோனம் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையில் சோனம்தான் இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளார் என்பது பின்னர் அம்பலமானது. அதன்பின் மேகாலாயாவின் சில்லாங் நீதிமன்றத்தில் சோனம் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சோனமுக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையைத் தொடர்ந்து ராஜ் குஷ்வாஹா காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்த பிறகு அவரது இறுதிச் சடங்கில் ராஜ் குஷ்வாஹா ஒன்றும் தெரியாதது போல் பங்கேற்றது தெரியவந்துள்ளது.

First Published :

June 10, 2025 11:16 AM IST

Read More

Previous Post

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி : கஜேந்திரகுமாருக்கு நீதியமைச்சர் அளித்த பதில்

Next Post

லெஜண்ட் சச்சின் பெயருடன் கோப்பையில் என் பெயரும் சேர்க்கப்பட்டது பெரிய கவுரவம்: ஆண்டர்சன் பெருமிதம் | James Anderson says It’s a great honour – after India-England trophy renamed

Next Post
லெஜண்ட் சச்சின் பெயருடன் கோப்பையில் என் பெயரும் சேர்க்கப்பட்டது பெரிய கவுரவம்: ஆண்டர்சன் பெருமிதம் | James Anderson says It’s a great honour – after India-England trophy renamed

லெஜண்ட் சச்சின் பெயருடன் கோப்பையில் என் பெயரும் சேர்க்கப்பட்டது பெரிய கவுரவம்: ஆண்டர்சன் பெருமிதம் | James Anderson says It's a great honour - after India-England trophy renamed

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin