• Login
Monday, May 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

180 இடங்களை தாண்டாது! பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காதாமே! காங்கிரஸ் நடத்திய உட்கட்சி சர்வே? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 5, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
180 இடங்களை தாண்டாது! பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காதாமே! காங்கிரஸ் நடத்திய உட்கட்சி சர்வே? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


180 இடங்களை தாண்டாது! பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காதாமே! காங்கிரஸ் நடத்திய உட்கட்சி சர்வேயில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம். லோக்சபாவில் உள்ள மொத்த இடங்கள்: 543, இதில் மெஜாரிட்டி பெற 272 இடங்களில் வெல்ல வேண்டும். லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது. 370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.

காங்கிரஸ் சொல்லும் நம்பர்: பாஜக இவ்வளவு பெரிய இலக்கை வைத்திருக்க காங்கிரஸ் கட்சியோ பாஜகவிக்கு தனியாக 180 இடங்கள்தான் கிடைக்கும். அதை கிராஸ் செய்யவே முடியாது என்கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் பலர் நேரடியாக களத்திலேயே இந்த நம்பரை தீவிரமாக குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் இப்படி பேசுவது வெறும் பிரச்சாரம் அல்ல வெறுமனே பேச்சு கிடையாது, மாறாக இதற்கு பின் வேறு சில விஷயங்கள் உள்ளன என்று காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. இன்டர்னல் சர்வே, பல்வேறு உள் ஆய்வுகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் ஆய்வுகள் அடிப்படையில்தான் இந்த நம்பரை கண்டுபிடித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் வெறுமனே இப்படி பேசவில்லை இன்டர்னல் சர்வேவிற்கு பின்பே காங்கிரஸ் இப்படி பிரச்சாரத்தில் பேசி வருகிறதாம். எதிர்க்கட்சி தலைவர்கள் கைது , எம்பிக்கள் கைது, அடுத்தடுத்து அமலாக்கத்துறை ரெய்டு, கச்சத்தீவு விஷயத்தை திடீரென பேசியது போன்ற விஷயங்கள் கூட பாஜகவின் பயம் காரணமாகவே. அவர்களுக்கே குறைவான இடத்தில் வெல்வோம் என்று தெரியும். அதனால்தான் இப்படி மாநில முதல்வர்களை கூட கைது செய்யும் நிலைக்கு சென்றுள்ளனர். பாஜக நம்பிக்கையின்றி இருக்கிறது. அதனால்தான் இப்படி செய்கிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக 180 இடங்களை தாண்டாது. அதனால்தான் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசாவில் எப்படியாவது வெல்ல முடியுமா, வெல்லும் இடங்களை அதிகரிக்க முடியுமா என்று பாஜக தீவிரமாக முயன்று வருகிறது என்று காங்கிரஸ் எடுத்த இன்டர்னல் சர்வேயில் கூறப்பட்டு உள்ளதாம்.

பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான பாஜக ஆதரவாளர்கள் ஆய்வாளர்கள் தெரிவித்தாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும். கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும். தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் தென்னிந்தியாவில் மட்டும் பாஜக சின்னங்கள் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தமிழ்நாடு – 19

கேரளா – 18

தெலுங்கானா – 13

ஆந்திரா – 06

பஞ்சாப் – 13

உத்தரகாண்ட்- 02

வடகிழக்கு- 02

மேற்கு வங்கம்- 16

பாஜகவின் இந்த 90 தொகுதிகளில்தான் பாஜகவிற்கு கடுமையான போட்டியே நிலவும். இதில் கர்நாடக தவிர மற்ற இடங்களில் பாஜகவிற்கு அவ்வளவு சாதகமான சூழ்நிலை இல்லை. இந்த 90ல் பாஜக 20- 25 இடங்களில் வென்றால் கூட மீதமுள்ள 373 இடங்களில் அப்படியே பாஜக தனியாக வெல்வது என்பதற்கு நம்பர்ஸ் ரீதியாக வாய்ப்பு குறைவு.அதனால் இந்த முறை பாஜக நினைத்த இலக்கை அடையுமா அல்லது காங்கிரசின் உள் சர்வே போல பாஜக தோற்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Read More

Previous Post

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை; 6.5% ஆக தொடரும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு | RBI keeps repo rate unchanged at 6.5%

Next Post

ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஆறு பேர் சஜித்தின் கூட்டணியில் இணைந்தனர்  

Next Post
ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஆறு பேர் சஜித்தின் கூட்டணியில் இணைந்தனர்  

ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட ஆறு பேர் சஜித்தின் கூட்டணியில் இணைந்தனர்  

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin