Last Updated:
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் தற்போது இணைந்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம் பிடித்துள்ளார்.
ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து, ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுகளை வழங்கி ஐசிசி கௌரவித்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் புதிதாக ஏழு பேரைத் தேர்வு செய்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,
அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் மற்றும் ஹாஷிம் ஆம்லா, நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான தோனி, 2007-ம் ஆண்டு இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இதையடுத்து 2011-ல் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடியது.
இந்திய அணிக்காக 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோனி, பத்தாயிரத்து 733 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி, 4876 ரன்களை எடுத்துள்ளார்.
June 10, 2025 10:28 AM IST


