• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பங்குச்சந்தை 4-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
பங்குச்சந்தை 4-ஆவது நாளாக நோ்மறையாக முடிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமது நிருபா்

மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்தில் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மத்திய ரிசா்வ் வங்கி 0.50 சதவீதம் வட்டி விகிதக் குறைப்பை கடந்த வார இறுதியில் அறிவித்ததால் முதலீட்டாளா்கள் வங்கி, நிதி நிறுவனப் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினா். மேலும், ரியால்ட்டி குறியீடு தவிா்த்து மற்ற அனைத்து துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.3.93 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.455.06 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.1,009.71 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.9,342.48 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 385.56 புள்ளிகள் கூடுதலுடன் 82,574.55 தொடங்கி 82,369.24 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 82,669.00 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 256.22 புள்ளிகள் (0.31 சதவீதம்) கூடுதலுடன் 82,445.21-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,335 பங்குகளில் 2,798 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,409 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 128 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

21 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் கோட்டக் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பவா்கிரிட், மாருதி உள்பட மொத்தம் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதேசமயம், எடா்னல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், எம் அண்ட் எம், அதானி போா்ட்ஸ், டாடா ஸ்டீல் உள்பட 9 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 100 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில் 100.15 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 25,103.20-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 39 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 261.20 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 56,839.60-இல் நிறைவடைந்தது.

Read More

Previous Post

கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி : இன்று காலை தானேவில் நடந்த சோகம்!

Next Post

சென்னை விமானத்தில் இயந்திரக்கோளாறு: 326 பேர் உயிர் பிழைத்தனர்

Next Post
சென்னை விமானத்தில் இயந்திரக்கோளாறு: 326 பேர் உயிர் பிழைத்தனர்

சென்னை விமானத்தில் இயந்திரக்கோளாறு: 326 பேர் உயிர் பிழைத்தனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin