Last Updated:
சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு, சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் திட்டம் புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா செயல்படுத்தவிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிமுகம் செய்தார்.
இவர்கள் சர்வதேச விண்வெளி பயண அனுபவத்தை பெறுவதற்காக, இஸ்ரோ பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆக்ஸிம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து “ஆக்சியம் 4” என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், சுபான்ஷு சுக்லாவும், அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் செவ்வாய்க்கிழமை சர்வதேச விண்வெளி மையத்துக்குச் செல்வதற்கு திட்டமிடப்பட்டது.
நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, எலான் மஸ்கு-க்குச் சொந்தமான பால்கன்-9 ராக்கெட் மூலம் செல்ல திட்டமிருந்த நிலையில், வானிலை மாற்றத்தால் சுபான்ஷு உள்ளிட்ட 4 வீரர்களின் பயணத் திட்டம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
June 09, 2025 9:57 PM IST
சர்வதேச விண்வெளிக்கு செல்லும் முதல் இந்தியரின் பயணம் திடீர் ஒத்திவைப்பு… என்ன காரணம்?


