இஸ்ரேலிய கடற்படையின் முற்றுகையை மீறி காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயற்சித்த படகொன்றை, இஸ்ரேலிய படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன.
முன்னதாக, இஸ்ரேலின் கடற்படை, மேற்படி படகை மாற்று வழியை பயன்படுத்துமாறு கோரிய போதும், அந்த படகு காசாவிற்குள் நுழைய முயற்சித்துள்ளது.
இதனையடுத்தே அந்தப் படகு தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


