• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தகாத உறவின் உச்சபட்ச கொடூரம்… மனைவியின் எல்லைமீறிய செயல்.. திடுக்கிடும் தகவல்கள்

GenevaTimes by GenevaTimes
June 9, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தகாத உறவின் உச்சபட்ச கொடூரம்… மனைவியின் எல்லைமீறிய செயல்.. திடுக்கிடும் தகவல்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 08, 2025 8:08 PM IST

கணவர் இல்லாத நேரம், காதலனுடன் அடிக்கடி தனிமையில் நேரத்தை செலவழித்து வந்தவர் குழந்தைகளைக் கவனிப்பதையும் விட்டுவிட்டார்.

கைது செய்யப்பட்ட சைத்ராகைது செய்யப்பட்ட சைத்ரா
கைது செய்யப்பட்ட சைத்ரா

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கெரளார் கிராமத்தில் வசிப்பவர் கஜேந்திரா. இவருக்கு 33 வயதில் சைத்ரா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குழந்தைகள் மனைவி என நிம்மதியாக நகர்ந்த கஜேந்திராவின் குடும்ப வாழ்க்கையில் சமீப காலமாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இதே ஊரைச் சேர்ந்த புனித் என்பவருடன் சைத்ராவிற்கு திருமணத்தை மீறிய உறவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவர் இல்லாத நேரம், காதலனுடன் அடிக்கடி தனிமையில் நேரத்தை செலவழித்து வந்தவர் குழந்தைகளைக் கவனிப்பதையும் விட்டுவிட்டார். இது தெரியவர கஜேந்திரா, தனது மனைவியை கடுமையாக கண்டித்து தகாத உறவைக் கைவிடும்படி எச்சரித்துள்ளார். இவ்விஷயத்தை தன் பெற்றோரிடமும் தெரிவிக்க, மருமகளுக்கு அவர்கள் புத்திமதி கூறி, ஒழுங்காக இருக்கும்படி எச்சரித்தனர். அதனால் சில நாட்கள் சைத்ரா நல்ல முறையில் குடும்பம் நடத்தி வந்தார்.

அதன்பின், சைத்ராவுக்கு, அதே கிராமத்தில் வசிக்கும் சிவராஜ் கவுடா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவருடனான பழக்கம் குடும்பத்தினருக்குத் தெரியவந்து பிரச்சினை ஆனால் இம்முறை சிவராஜுடனான பழக்கம் சைத்ராவுக்கு லேசான அச்சத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் அவ்வுறவைக் கைவிட அவர் நினைக்கவில்லை. மாறாக கணவர், இரு குழந்தைகள், மற்றும் மாமனார், மாமியாரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

அத்திட்டத்தில் அவரது கள்ளக்காதலனும் கைகோர்க்க, அவர் கொடுத்த விஷத்தன்மை கொண்ட மாத்திரைகளை டீ காபியில் கலந்து, கணவர் மற்றும் குழந்தைகளுக்கு குடிக்கச் சொல்லி நைஷாக கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பத்தையும் காலி செய்ய இக்கொடூர செயலில் ஈடுபட்ட சைத்ராவின் வண்ம புத்தி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இளைய மகனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட உடனே அவரை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடைசியாக மனைவி கொடுத்த டீயை குடித்தே மகனுக்கு இப்படி ஆனது, என்பதை உணர்ந்த கஜேந்திரா வீடு முழுக்க தேடி பார்த்து அந்த மாத்திரை அட்டைகளை கைப்பற்றி உள்ளார்.

அதை எடுத்து சென்று மெடிக்கல் ஷாப்பில் விசாரிக்க அது விஷத்தன்மை கொண்டது என தெரியவர அதிர்ந்து போனார். இனியும் விட்டால்! வீட்டில் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என அலர்ட்டான கஜேந்திரா, தனது மனைவி சைத்ரா மீது பேலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். விஷத்தன்மை கொண்ட மாத்திரைகளை டீ காபியில் கலந்து கொடுத்து தன்னையும் தன் குழந்தைகளையும், மனைவியே கொலை செய்ய முயன்றார் எனப் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து சைத்ராவை கைது செய்து விசாரிக்க தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் குடும்பத்தின்ரை தீர்த்துக் கட்ட திட்டம் போட்டு, அதற்காக விஷ தன்மை கொண்ட மாத்திரைகளை டீ காபியில் கலந்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் சைத்ராவையும், அவரது கள்ளக்காதலன் சிவராஜ் கவுடாவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரம் கணவன் குடும்பத்திற்குத் தெரிய வந்த நிலையில், அந்த குடும்பத்தையே தீர்த்துக்கட்டத் துணிந்த பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First Published :

June 08, 2025 8:08 PM IST

Read More

Previous Post

பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை

Next Post

‘நேஷன்ஸ் லீக்’ பட்டம் வென்ற போர்ச்சுகல்: ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தியது | Portugal wins uefa Nations League title Beats Spain in penalty shootout

Next Post
‘நேஷன்ஸ் லீக்’ பட்டம் வென்ற போர்ச்சுகல்: ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தியது | Portugal wins uefa Nations League title Beats Spain in penalty shootout

‘நேஷன்ஸ் லீக்’ பட்டம் வென்ற போர்ச்சுகல்: ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தியது | Portugal wins uefa Nations League title Beats Spain in penalty shootout

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin