• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ப்ரைம் வாலிபால் லீக் ‘சீசன் 4’ ஏலம்: ஜெரோம் வினித்துக்கு ரூ.22.5 லட்சம்! | prime Volleyball League Season 4 auction player details explained

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ப்ரைம் வாலிபால் லீக் ‘சீசன் 4’ ஏலம்: ஜெரோம் வினித்துக்கு ரூ.22.5 லட்சம்! | prime Volleyball League Season 4 auction player details explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோழிக்கோடு: இந்தியாவின் முன்னணி வாலிபால் லீக் தொடராக வளர்ந்து வரும் ப்ரைம் வாலிபால் லீக் (PVL) தொடரின் நான்காவது சீசனை கொண்டாடும் வகையில், கோழிக்கோட்டில் இன்று (ஜூன் 8) நடைபெற்ற வீரர் ஏலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏலத்தில் பல வீரர்கள் புதிய அணிகளில் இடம் பிடித்தனர். இதில் முக்கியமாக, இந்தியா முழுவதும் பிரபலமான வாலிபால் வீரர் ஜெரோம் வினித் சி, ரூ.22.5 லட்சம் என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை ப்ளிட்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார்.

ஜெரோம், ஏற்கனவே காலிக்கட் ஹீரோஸ் அணியில் விளையாடியவர். இவருக்காக நடைபெற்ற ஏலத்தில், சென்னை ப்ளிட்ஸ், பெங்களூரு டார்பிடோஸ் மற்றும் கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ் ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நடைபெற்றது. இறுதியில் சென்னை ப்ளிட்ஸ் அதிகமாக பணம் கொடுத்து அவரை தங்கள் அணியில் சேர்த்தது. இது அவருடைய திறமையை மையப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாகும்.

ஏலத்தில் அணிகள் தேர்வு செய்த வீரர்களின் விவரம் – சென்னை ப்ளிட்ஸ்: ஜெரோம் வினித் சியைத் தவிர, எம்.அஷ்வின் ராஜ் மற்றும் சமீர் சவுதரியையும் தங்களுடன் சென்னை அணி சேர்த்தது. இருவரும் பிளாட்டினம் வகை வீரர்கள். அவர்கள் தலா ரூ.8 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டனர். இந்த மூவரும் சேரும் போது, சென்னை ப்ளிட்ஸ் அணிக்கு ஒரு சக்திவாய்ந்த தாக்கம் உருவாகும் என்பது உறுதி.

காலிக்கட் ஹீரோஸ்: சொந்த நகர வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், காலிக்கட் ஹீரோஸ் ஷமீமுதீனை ரூ.22.5 லட்சததுக்கு தேர்வு செய்தது. அவருடன் அனுபவமிக்க செட்டரான மோகன் உக்கிரபாண்டியன் (ரைட் டு மேட்ச் மூலம்) மற்றும் சந்தோஷ் ஆகியோரும் ரூ.8 லட்சம் வீதம் கொடுத்து சேர்க்கப்பட்டனர்.

கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ்: வினித் குமாரை ரூ.22.5 லட்சத்தில் வாங்கியது கொச்சி அணி. இவரும் இந்தியாவைச் சேர்ந்த முக்கியமான வாலிபால் வீரர். அவருடன் அமல் கே தாமஸை ரூ.6.5 லட்சததுக்கும், ஜாஸ்ஜோத் சிங்கை கோல்ட் வகையில் ரூ.14.75 லட்சம் கொடுத்து வாங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட தொகை, கோல்ட் வகை வீரர்களில் மிக உயர்ந்த தொகையாகும்.

அஹ்மதாபாத் டிபெண்டர்ஸ்: ஷான் டி ஜானை கடந்த சீசனிலேயே தங்களிடம் வைத்திருந்தது அஹ்மதாபாத். அவரை மீண்டும் ரைட் டு மேட்ச் மூலம் ரூ.11.5 லட்சத்தில் தக்க வைத்துக்கொண்டது. இவருடன் அங்கமுத்து ரூ.11 லட்சத்துக்கும், அகின் ஜிஎஸ் ரூ.10.5 லட்சத்துக்கும் அணியில் சேர்ந்தனர். இது அணியின் அனுபவத்தையும், தாக்கத்தையும் அதிகரிக்கும்.

டெல்லி தூஃபன்ஸ்: பிளாட்டினம் வகையில் ஆயுஷை ரூ.9 லட்சததுக்கு வாங்கியது டெல்லி. இது அந்த அணியின் அதிகபட்ச ஒதுக்கீடு. கோல்ட் வகையில் ஜார்ஜ் ஆண்டனி ரூ.5 லட்சம் மற்றும் மன்னத் சவுத்ரி ரூ.6.5 லட்சம் ஆகியோரும் அணியில் இணைந்தனர். இவர்கள் எதிர்காலத்தில் அணி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கலாம்.

ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ்: ஷிகர் சிங்கை ரூ.16 லட்சததுக்கு தேர்ந்தெடுத்தது. இதுவும் ஒரு முக்கியமான கட்டுமானமாகும். அமன் குமார் ரூ.11.5 லட்சம் மற்றும் தீபு வேணுகோபால் ரூ.5.75 லட்சம் கொடுத்து அணியில் இணைக்கப்பட்டனர்.

மும்பை மீட்டியர்ஸ்: பிளாட்டினம் வகையில் கார்த்திக் மற்றும் ஓம் வசந்த் ஆகியோரை தலா ரூ.8 லட்சம் கொடுத்து சேர்த்தது. கோல்ட் வகையில், விபுல் குமார் ரைட் டு மேட்ச் மூலம் ரூ.6.25 லட்சம், சோனு மற்றும் நிகில் தலா ரூ.5 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டனர்.

கோவா கார்டியன்ஸ்: இந்த சீசனில் புதிதாக சேரும் அணியான கோவா அணி, பிரின்ஸ் மற்றும் ராமநாதன் ஆகியோரை ரூ.8 லட்சம் வீதம் கொடுத்து எடுத்தது. அமித் சோக்கரை ரூ.5 லட்சத்திற்கு அணியில் இணைக்கப்பட்டார். புதிய அணிக்கு இது நல்ல தொடக்கம் எனலாம்.

பெங்களூரு டார்பிடோஸ்: ஏலத்தில் தாமதமாக கலந்துகொண்டது பெங்களூரு அணி. ஆனால் கோல்ட் வகையில் ஜிஷ்ணு பி.வி-யை ரூ.14 லட்சததுக்கு வாங்கியது. பெஞ்சமின் ரூ.6.5 லட்சம், இபின் ஜோஸ் மற்றும் ரோஹித் குமார் ரூ.5 லட்சம் கொடுத்து அணியில் சேர்த்தனர்.

கொல்கத்தா தண்டர் போல்ட்ஸ்: பங்கஜ் சர்மவை ரூ.6 லட்சததுக்கும், பின்னர் ஸ்ரஜன் ஷெட்டியை ரூ.5 லட்சததுக்கும் வாங்கியது. இவர்கள் அணியின் தளங்களை நிரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட திறமையான வீரர்கள்.

இந்த ஆண்டின் பிவிஎல் சீசன் 4 ஏலம், பல வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. முக்கியமாக ஜெரோம் வினித் சி, ஷமீமுதீன், வினித் குமார் மற்றும் ஜாஸ்ஜோத் சிங் ஆகியோர் அதிக தொகைக்கு வாங்கப்பட்டதால், அவர்களின் திறமைக்கு மரியாதை கிடைத்துள்ளது. அத்துடன், புதிய அணிகள், இளம் வீரர்கள் மற்றும் ரைட் டு மேட்ச் வாயிலாக பழைய வீரர்களை தக்க வைத்த அணிகளும், இந்த சீசனை மிக வலுவாக தொடங்க உள்ளன.

இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு அணியும், தங்களின் தேவைக்கு ஏற்ப வீரர்களை தேர்ந்தெடுத்து, சமநிலையான அணிகளை உருவாக்கி உள்ளனர். ஆகவே, இந்த சீசனும் ரசிகர்களை மகிழ்விக்கத் தவறாது என நம்பலாம்.



Read More

Previous Post

காதலியை கொலை செய்து உடலை சூட்கேஸில் வைத்து வீசிய காதலன்..! போலிசாரால் அதிரடி கைது

Next Post

US-China: “சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..” – அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

Next Post
US-China: “சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..” – அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

US-China: ``சீன பூஞ்சை Covid-ஐ விட மோசமானது; போருக்கு சமம்..'' - அமெரிக்க நிபுணர் சொல்வது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin