• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் 7-வது முறையாக பட்டம் வென்றார்! | Carlsen wins the Norway Chess Championship for the 7th time

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
நார்வே செஸ் தொடரில் கார்ல்சன் 7-வது முறையாக பட்டம் வென்றார்! | Carlsen wins the Norway Chess Championship for the 7th time
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்றது. 6 வீரர்கள் கலந்து கொண்டு இந்த தொடர் இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டது. இதன் கடைசி சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ் 50-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார்.

தொடக்கத்தில் குகேஷ் பின்தங்கிய நிலையில் இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர், மீண்டு வர முயற்சித்த போது கண்மூடித்தமாக செய்த தவறால் தனது வாய்ப்பை நழுவவிட்டு தோல்வியை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் அவர், வெற்றி பெற்றிருந்தால் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருப்பார்.

ஏனெனில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சன் தனது கடை சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார். இந்த ஆட்டம் 56-வது நகர்த்தலின் போது டிராடிவில் முடிவடைந்திருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அர்மகேதான் டைபிரேக்கரில் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதனால் கார்ல்சன் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

9-வது சுற்று வரை கார்ல்சன் 15 புள்ளிகளையே பெற்றிருந்தார். குகேஷ் 14.5 புள்ளிகளை பெற்றிருந்தார். குகேஷ் தனது கடைசி சுற்றில் வெற்றி பெற்றிருந்தால் முழுமையாக 3 புள்ளிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றிருப்பார். ஆனால் அது நிகழவில்லை. கார்ல்சன், நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது இது 7-வது முறையாகும். பேபியானோ கருனா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார். குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தார். அர்ஜூன் எரிகைசி 13புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார்.



Read More

Previous Post

ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கூகுள் அலுவலகம் | Google office to be set up in Andhra Pradesh on 143 acres

Next Post

ரூ.2.5 லட்சம் வரை கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன்: ரிசர்வ் வங்கி தகவல் | Loan up to 85 percent of the value of gold jewellery for loan

Next Post
ரூ.2.5 லட்சம் வரை கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன்: ரிசர்வ் வங்கி தகவல் | Loan up to 85 percent of the value of gold jewellery for loan

ரூ.2.5 லட்சம் வரை கடனுக்கு தங்க நகை மதிப்பில் 85% வரை கடன்: ரிசர்வ் வங்கி தகவல் | Loan up to 85 percent of the value of gold jewellery for loan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin