432 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து : டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் வெளியிட்ட ப்ளூம்பெர்க் தரவுகளின் படி, வால்டன் குடும்பத்தின் மொத்த நிகர சொத்து மதிப்பு 432 பில்லியன் அமெரிக்க டாலர் ஆக உள்ளது. இது கிரீஸ், ஹங்கேரி மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்மார்ட் சாம்ராஜ்யம்
வால்மார்ட் நிறுவனம் 1962 ஆம் ஆண்டு சாம் வால்டன் மற்றும் அவரது சகோதரரான பட் வால்டன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இன்று, இந்த நிறுவனம் உலகளவில் 10,750-க்கும் மேற்பட்ட கடைகளை இயக்கி வருகிறது. இதில் அமெரிக்காவில் மட்டும் 4,600-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதன்மூலம், வால்மார்ட் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளராக முன்னிலை வகிக்கிறது. வால்மார்ட் சில்லறை வணிகத்தைத் தவிர, வால்டன் குடும்பம் விளையாட்டு, ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு போன்ற துறைகளிலும் செல்வாக்கை மிக்கவர்களாக இருக்கின்றனர்.
வால்டனின் வாரிசுகள்
வால்டன் குடும்பத்தின் செல்வமானது, வால்மார்ட் நிறுவனத்தில் அவர்கள் வசம் இருக்கும் சுமார் 45% பங்குகள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில், சாம் வால்டனின் வாரிசுகளான ராப் வால்டன், ஜிம் வால்டன் மற்றும் ஆலிஸ் வால்டன் ஆகிய மூவரும், அவரது மருமகள் கிறிஸ்டி மற்றும் அவரது பேரன் லூகாஸ் ஆகியோர் உள்ளனர். அதேபோல், பட் வால்டனுக்கு ஆன் வால்டன் மற்றும் நான்சி வால்டன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
வால்டனின் விளையாட்டு அணிகள்
வால்டனின் வாரிசரான ஆன் வால்டன் க்ரோன்கே மற்றும் அவரது கணவர் ஸ்டான் க்ரோன்கே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விளையாட்டு துறையில் பல அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர். இது, வால்டன் குடும்பத்தின் செல்வத்திற்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. வால்டன் குடும்பத்திடம் மொத்தமாக ஏழு விளையாட்டு அணிகள் உள்ளன.
உலகின் செல்வாக்கு மிகுந்த குடும்பமாக இருந்தாலும், வால்டன் குடும்பம் பற்றிய தகவல்கள் பெரிதாக யாருக்கும் தெரியாது. மேலும், இவர்களின் பெரும்பாலான செல்வத்தை அறக்கட்டளைகள் மற்றும் சமூக நலனுக்காக செலவிடுகிறார்கள். ஒரு சின்ன சில்லறை விற்பனைக் கடையில் தொடங்கிய இவர்களின் பயணம், தற்போது சாதனையின் அடையாளமாக போற்றப்படுகிறது.
June 07, 2025 7:12 PM IST

