• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அடுத்த ஆண்டு முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போய்விடுமா? – மத்திய அரசு விளக்கம் | Will Rs 500 notes be demonetised from next year Central Government clarification

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அடுத்த ஆண்டு முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போய்விடுமா? – மத்திய அரசு விளக்கம் | Will Rs 500 notes be demonetised from next year Central Government clarification
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது டெல்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறும் யூடியூப் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக வைரலாகி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜூன் 2 ஆம் தேதி ‘கேபிடல் டிவி’ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 நிமிடம் உள்ள இந்த வீடியோவை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இந்த வீடியோ மக்களிடையே குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. இருப்பினும், மத்திய அரசு இந்த தகவல் ‘போலியானது’ என்றும், ரிசர்வ் வங்கி இத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரூ.500 நோட்டுகள் ரத்து செய்யப்படவில்லை, அவை சட்டப்பூர்வமானவை. தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம். செய்திகளை நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன்பு எப்போதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கவும்’ என்று தெரிவித்துள்ளது.

தற்போதைய ரூ.500 பணத்தாள்கள் 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டன. 66 மிமீ x 150 மிமீ எனும் நோட்டுகளின் அளவுடன், சாம்பல் நிறத்தில் இந்த பணத்தாள் உள்ளது. அதேபோல மற்ற இந்திய ரூபாய் நோட்டுகளைப் போலவே ரூ.500 நோட்டுகளிலும் அவற்றின் தொகை 17 மொழிகளில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் முதன் முறையாக தகுதி | Uzbekistan and Jordan qualify for first time at FIFA World Cup

Next Post

உலகின் பணக்கார குடும்பம்.. ரூ.30 லட்சம் கோடி… 3 நாடுகளின் ஜிடிபி-ஐ விட அதிகமான சொத்து

Next Post
உலகின் பணக்கார குடும்பம்.. ரூ.30 லட்சம் கோடி… 3 நாடுகளின் ஜிடிபி-ஐ விட அதிகமான சொத்து

உலகின் பணக்கார குடும்பம்.. ரூ.30 லட்சம் கோடி... 3 நாடுகளின் ஜிடிபி-ஐ விட அதிகமான சொத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin