• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ITR : வருமான வரி தாக்கல் செய்யும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்..!

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ITR : வருமான வரி தாக்கல் செய்யும் முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 07, 2025 6:00 PM IST

2025-26 மதிப்பீட்டு ஆண்டிற்கான ITR தாக்கல் சீசன் துவங்கியது. வரிசெலுத்துவோர் தங்கள் வருமானத்தின் அடிப்படையில் 7 ITR படிவங்களில் ஒன்றை தேர்வு செய்து தாக்கல் செய்யலாம்.

கோப்பு படம்கோப்பு படம்
கோப்பு படம்

2025 -26 மதிப்பீட்டு ஆண்டிற்கான ITR தாக்கல் செய்யும் சீசன் தற்போது துவங்கியுள்ளது. எல்லா வருடங்களைப் போலவே அனைத்து வரிசெலுத்துவோரும் மாத வருமானம் பெறுபவர்கள் உட்பட வருமானவரி துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் கிடைக்கக்கூடிய 7 ITR படிவங்களில் ஒன்றை தேர்வு செய்து, தங்களுடைய ரிட்டன்களை தாக்கல் செய்ய ஆரம்பிக்கலாம். உங்களுடைய வருமானத்தின் வகையை பொறுத்து படிவத்தை தேர்வு செய்து, அதனை நிரப்பி ஆன்லைனில் எளிதாக சமர்ப்பிக்கலாம்.

ITR படிவம் என்றால் என்ன? ITR (இன்கம் டேக்ஸ் ரிட்டன்) படிவம் என்பது குறிப்பிட்ட நிதி ஆண்டில் வரி செலுத்துவோர் அவர்களுடைய வருமானம் மற்றும் வருமானவரித் துறையினருக்கு செலுத்திய வரிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு ஆவணம்.

எந்த ITR படிவத்தில் ரிட்டனை தாக்கல் செய்ய வேண்டும்?

ஒவ்வொரு வருடமும் பல்வேறு வரி செலுத்துவோர் பிரிவினருக்காக சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டேக்சஸ் (CBDT) வெவ்வேறு ITR படிவங்களை வெளியிடும். இதில் மாத வருமானம் பெறுபவர்கள், தொழில் செய்து வரும் முதலாளிகள் மற்றும் நிறுவனங்கள் போன்றவை அடங்கும். நீங்கள் தாக்கல் செய்ய வேண்டிய படிவமானது உங்களுடைய மொத்த வருமானம், நீங்கள் சம்பாதித்த வருமானத்தின் வகை மற்றும் உங்களுடைய வரி செலுத்துவோர் பிரிவு (தனிநபர், HUFகள் அல்லது நிறுவனம்) போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

ITR படிவத்தின் வகைகள் மற்றும் அவற்றை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

ITR 1 : இந்த படிவமானது 50 லட்சம் ரூபாய் வரை மொத்த வருமானம் ஈட்டும் தனி நபர்களுக்கானது. இந்த வருமானம் என்பது சம்பளம் அல்லது பென்ஷன், ஒரு வீடு மற்றும் வட்டி போன்ற பிற மூலங்கள் வழியாக பெறப்பட்டதாக இருக்கலாம். நேர்படையான வருமான விவரங்கள் கொண்ட மாத வருமானம் பெறும் ஊழியர்களுக்கு இந்த படிவம் ஏற்றதாக இருக்கும். ஆனால் அனைவராலும் இந்த ITR 1 படிவத்தை பயன்படுத்த முடியாது. ஒரு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் நபர்கள், வெளிநாடுகளில் இருந்து வருமானம் பெறுபவர்கள் அல்லது இந்தியாவிற்கு வெளியே இருக்கும் சொத்துக்கள் மூலமாக வருமானம் பெறுபவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்த முடியாது. கூடுதலாக ஒரு நபர் தன்னுடைய விவசாயம் மூலமாக ஒரு ஆண்டுக்கு 5000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் பட்சத்தில் அவரால் ITR 1 படிவத்தை பயன்படுத்த முடியாது.

ITR 2: தொழில் அல்லது எந்த விதமான உத்தியோகம் மூலமாக வருமானம் பெறாத தனிநபர்கள் அல்லது பிரிவுபடா இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு இந்த படிவம் ஏற்றது. ஆண்டு வருமானம் 50 லட்சம் ரூபாயை விட அதிகமாக பெறுபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். சம்பளம், பல வீடுகள் அல்லது வெளிநாட்டு வருமானம் போன்றவை இதில் அடங்கும். மறுபுறம், தொழில் அல்லது வேறு எந்த உத்தியோகம் மூலமாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது HUFகளுக்கு ITR 2 படிவம் ஏற்றது அல்ல. கமிஷன், போனஸ் அல்லது கூட்டு வணிக நிறுவனத்திடம் இருந்து பெரும் ஊதியம் போன்றவை இந்த படிவத்திற்கு பொருந்தாது.

வருமானவரித்துறை சமீபத்தில் ITR 2 -க்கான புதுப்பிக்கப்பட்ட எக்ஸெல் அடிப்படையிலான பயனமைப்பை வெளியிட்டது. மார்ச் 25, 2025 அன்று வெளியிடப்பட்ட இந்த புதிய பதிப்பு மூலமாக வரிசெலுத்துவோர் பிரிவு 139 (8A) -இன் கீழ் திருத்தம் செய்யப்பட்ட ரிட்டன்களை தாக்கல் செய்யலாம். இது குறிப்பாக மாத வருமானம் பெறுபவர்கள், பென்ஷன் பெற்று வருபவர்கள் மற்றும் தொழில் செய்யாத பிற வரி செலுத்துவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ITR 1 மற்றும் ITR 2 தவிர இன்னும் 5 வகையான ITR படிவங்கள் கிடைக்கின்றன. இவை ஒவ்வொன்றுமே வரிசெலுத்துவோரின் வருமான மூலங்கள் மற்றும் வரி விவரங்கள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

First Published :

June 07, 2025 6:00 PM IST

Read More

Previous Post

ஸ்ரேயாஸ் ஐயரின் 2 குழந்தைகளுக்கு தாயாக விரும்புகிறேன்

Next Post

209 ட்ரோன்கள், 9 ஏவுகணைகள்… – உக்ரைன் மீது ரஷ்யா சக்தி வாய்ந்த தாக்குதல் – பாதிப்பு என்ன? | Russia s most powerful attack on Ukraine s Kharkiv explained

Next Post
209 ட்ரோன்கள், 9 ஏவுகணைகள்… – உக்ரைன் மீது ரஷ்யா சக்தி வாய்ந்த தாக்குதல் – பாதிப்பு என்ன? | Russia s most powerful attack on Ukraine s Kharkiv explained

209 ட்ரோன்கள், 9 ஏவுகணைகள்... - உக்ரைன் மீது ரஷ்யா சக்தி வாய்ந்த தாக்குதல் - பாதிப்பு என்ன? | Russia s most powerful attack on Ukraine s Kharkiv explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin