• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெங்களூரு கூட்ட நெரிசல்: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா | Bengaluru stampede: Karnataka State Cricket Association Secretary, Treasurer resign

GenevaTimes by GenevaTimes
June 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பெங்களூரு கூட்ட நெரிசல்: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா | Bengaluru stampede: Karnataka State Cricket Association Secretary, Treasurer resign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாக முன்வந்து பதவி விலகி உள்ளனர்.

குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 3-ம் தேதி நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, மறுநாள் (ஜூன் 4) பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோப்பையை வென்ற அணி வீரர்களைக் காண பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், நிகழ்ந்த தவறுக்குப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் ஏ. சங்கர் மற்றும் பொருளாளர் E.S.ஜெய்ராம் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) தாமாக முன்வந்து தங்கள் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களில் நடந்த எதிர்பாராத மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் காரணமாக நாங்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளோம். ஜூன் 6, 2025 தேதியிட்ட இதற்கான கடிதத்தை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவரிடம் அளித்துள்ளோம்.

இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்ததில் எங்கள் பங்கு மிகவும் குறைவு என்ற போதிலும், தார்மீகப் பொறுப்பின் காரணமாக ராஜினாமா செய்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகுராம் பட், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறார். கூட்ட நெரிசல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட FIR-ஐ அடிப்படையாகக் கொண்டு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் மீது எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6, 2025) தடை விதித்தது நினைவுகூரத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளரான ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RCSPL) நிறுவனத்துக்கு எம். சின்னசாமி மைதானத்தை வாடகைக்கு மட்டுமே விட்டதாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

Tamilmirror Online || பெங்களூரு விவகாரம் : கோலிக்கு எதிராக முறைப்பாடு

Next Post

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா

Next Post
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ராஜினாமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin