பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மே 20 அன்று சபையில் நடந்து கொண்ட விதம் குறித்து பெறப்பட்ட புகாரை விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் கயந்த கருணாதிலக்க விலகிக்கொண்டார்.
அதிக வேலைப்பளு காரணமாக கயந்த கருணாதிலக்க அந்தக் குழுவில் பணியாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவுக்கு பதிலாக, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்படுவார் என்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.

