• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

முடிவுக்கு வந்த ட்ரம்ப் – மஸ்க் நல்லுறவு: மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்! | End of Trump – Musk Bromance and social media memes

GenevaTimes by GenevaTimes
June 6, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
முடிவுக்கு வந்த ட்ரம்ப் – மஸ்க் நல்லுறவு: மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்! | End of Trump – Musk Bromance and social media memes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. ஒருவர் புவி அரசியலில் சர்வ வல்லமை பொருந்திய அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் செல்வமும் மோதும்போது அது இருவருக்குமே தோல்வியைத் தராத ‘வின் – வின்’ (win – win) நிலையாகத்தான் செல்லும் என்றாலும் யாருக்கு, யார் அதிக அழுதத்ததைத் தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க உலகம் தயாராகிவிட்டது.

பொங்கி வழிந்த ‘ப்ரோமேன்ஸ்’ – அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருடன் ஒட்டி உறவாடியவர் எலான் மஸ்க். அதன் பின்னரும் அந்த உறவு ‘இதெல்லாம் ஓவர்’ என்று செனட் உறுப்பினர்கள் சொல்லும் அளவுக்கு சென்று கொண்டிருந்தது. எவ்வளவு தூரம் என்றால், உலகின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்ட, ஒப்பந்தங்கள் கையெழுத்தான அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் மஸ்கின் குழந்தை விளையாடியது வரை அந்த ட்ரம்ப் – மஸ்க் ‘ப்ரோமேன்ஸ்’ (Bromance) பொங்கி வழிந்தது.

இந்நிலையில்தான், “எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால், இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ, இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

அவ்வளவுதான் அங்கு தொடங்கிய வார்த்தை மோதல், இப்போது கொஞ்சம் வார்த்தைகள் தடித்து கடுமையாகிவிட்டது. இருவரும் சரமாரி சமூக வலைதளங்களில் தாக்கிக் கொள்கின்றனர். ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவை மஸ்க் தாக்குவதும், மஸ்கின் டெஸ்லாவுக்கான மானியங்களை நிறுத்தலாம் என ட்ரம்ப் பதிலடி கொடுப்பதுமாக இந்த வார்த்தை மோதல் நீண்டு கொண்டிருக்கிறது. இவ்வளவு போதாதா நெட்டிசன்களுக்கு மீம்களை அள்ளித் தெறித்து வருகின்றனர். அவற்றில் பலவும் கவனம் ஈர்த்துள்ளன.

“ட்ரம்ப் – எலான் மஸ்க் மோதல் ஃப்ரீ டு ஏர் முறையில் காணக் கிடைப்பதற்கு நன்றி. ஒவ்வொரு பார்வைக்கும் இவ்வளவு விலை என்று நிர்ணயித்திருந்தால், எல்லோரும் கண்டு ரசித்திருக்க முடியாது” என்று நியூஸ் சேனல்களில் ட்ரம்ப் – மஸ்க் மோதல் பற்றிய செய்திகள் வருவதை சுட்டிக் காட்டி ஒருவர் கிண்டல் செய்துள்ளார். இன்னொருவர், அமெரிக்காவில் பிரபலமான மீன் கேர்ல்ஸ் (Mean Girls) பதின்ம வயதினருக்கான காமெடி சீரிஸில் பதின் பருவத்தினர் இட்டுக் கொள்ளும் சண்டைபோல் ட்ரம்ப் – மஸ்க் மோதல் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுமட்டுமல்லாது ட்ரம்ப் – எலான் மஸ்க் ரெஸ்ட்லிங் உடையில் கோதாவில் மோதலுக்கு தயாராக இருப்பது போன்ற போஸ்டர்களையும் பகிர்ந்து பகடி செய்யப்பட்டுள்ளது. மற்றுமொரு நெட்டிசன் கிண்டலின் உச்சத்துக்கே சென்று ட்ரம்ப் – மஸ்க் மோதலும் சர்வதேச புவி அரசியலும் என்று தலைப்பிட்டு ஒரு கார்ட்டூன் படத்தையும் பகிர்ந்திருக்கிறார். அதில் இரண்டு குரங்குகள் மோதுவதை வரைந்து அவற்றுக்கு ட்ரம்ப், மஸ்க் என்று பெயரிட்டுள்ளார்.

புதின், ஜின்பிங் மற்றும் கிம்: இந்த மோதலை கலாய்க்க ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மட்டும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரையும் துணைக்கு இழுத்து மீம் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதில் சீன அதிபர் ஜி ஜின் பிங் ட்ரம்ப் – மஸ்க் மோதலைப் பற்றிப் பேச ரஷ்ய அதிபர் புதினை அழைப்பது போலவும், அந்த நேரத்தில் ஜின்னுக்கு இன்னொரு அழைப்பு வருவது போலவும், அதில் கிம் ஜோங் உன் அதே விஷயத்தைப் பற்றி பேசுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆக, அமெரிக்காவின் பரம எதிரிகளான ரஷ்ய, சீன, வடகொரிய அதிபர்கள் மஸ்க் – ட்ரம்ப் மோதலை போன் போட்டு கிண்டல் செய்வது போல் அந்த மீம் பதிவிடப்பட்டுள்ளது.

இனி எல்லாம் அவ்வளவுதானா? – கடந்த வாரம் ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து எலான் மஸ்க் விலகியதிலிருந்து நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் பூகம்பத்தால் புரட்டிப் போடப்பட்ட பூமித் தகடுகள் போல் இருப்பதால் அரசியலிலும் சரி, சாமானியர்களிடமும் சரி, அது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் அமெரிக்காவின் அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் செல்வமும் மோதும்போது அது வின் – வின் நிலையாகத்தான் செல்லும் என்றாலும், யாருக்கு, யார் அதிக அழுதத்தத்தை தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க உலகம் தயாராகிவிட்டது.



Read More

Previous Post

ரீல்ஸ் போட்டு பணம் அள்ளலாம்… இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் ஆக இதை ஃபாலோ பண்ணுங்க…

Next Post

மலாய்காரர் அல்லாதவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் என்ன? – Malaysiakini

Next Post
மலாய்காரர் அல்லாதவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் என்ன? – Malaysiakini

மலாய்காரர் அல்லாதவர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் என்ன? – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin