• Login
Sunday, April 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியா – பாக். மோதலின் பொருளாதார தாக்கம் எத்தகையது? – ஆர்பிஐ கவர்னர் விவரிப்பு | India, Pak Conflict Had Negligible Impact On Economic Activity says RBI Governor

GenevaTimes by GenevaTimes
June 6, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியா – பாக். மோதலின் பொருளாதார தாக்கம் எத்தகையது? – ஆர்பிஐ கவர்னர் விவரிப்பு | India, Pak Conflict Had Negligible Impact On Economic Activity says RBI Governor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்பது பொருளாதார நடவடிக்கைகளில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இந்த நேரத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அந்த தாக்குதலால் மிக மிகக் குறைவாக சிறிய அளவிலேயே பொருளாதார பாதிப்புகள் இருந்தன. அந்த நேரத்தில் அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் மட்டுமே சிறிய பாதிப்புகள் இருந்தன. விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் விமானப் போக்குவரத்து நிச்சயமாக குறைந்திருந்தது. ஆனால், விநியோகச் சங்கிலியில் பெரிய தடங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அதனால், இது பொருளாதார நடவடிக்கைகள், வளர்ச்சி, பணவீக்கம் போன்றவற்றை பாதிக்காது. சில நாட்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் விலைகள் சற்று உயர்ந்திருந்தன. அவை இப்போது இயல்புக்கு திரும்பியுள்ளன. இது பொருளாதாரத்தில் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தற்போது அதிகரித்து வரும் கரோனா பரவல் பற்றி இப்போதைக்கு கவலைக் கொள்ள தேவையில்லை. கரோனா என்பது இப்போது சாதாரண வைரஸ்களில் ஒன்றாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன். அது அப்படியே இருக்கும் என்றும் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

கோப்பை பெயர் முதல் முக்கிய வீரர் மாற்றம் வரை… இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புதிய மாற்றங்கள்!

Next Post

ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300: காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ | Rs 5 Parle G biscuits cost Rs 2300 Shocking news in war torn Gaza

Next Post
ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300: காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ | Rs 5 Parle G biscuits cost Rs 2300 Shocking news in war torn Gaza

ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300: காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ | Rs 5 Parle G biscuits cost Rs 2300 Shocking news in war torn Gaza

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin