கச்சத்தீவு விவகாரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசி தீர்வு காணப்பட்டுவிட்டதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களை அண்மையில் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸும், திமுகவும் சதி செய்து இலங்கைக்கு கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதன்பின் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கச்சத்தீவை மீட்க இந்தியா அனைத்து விதமான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியாவிற்கு கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க மாட்டோம் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவிற்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது என்றும் கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலும் சூறையாடப்பட்டுவிடும் என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இதேபோன்று இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, கச்சத்தீவு விவகாரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசி தீர்வு காணப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். எனவே, கச்சத்தீவு தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வாலிடம், கச்சத்தீவு விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், இந்த விவகாரம் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்றும் செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வியெழுப்பினர். ஆனால், கச்சத்தீவு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கமளித்திருப்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மழுப்பலாக பதிலளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
