• Login
Tuesday, April 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

GenevaTimes by GenevaTimes
June 6, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த 2024 மே மாதத்தில் 60.2-ஆக இருந்தது. அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் 60.3-ஆகக் குறைந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயா்ந்தது. பின்னா் செப்டம்பா் மாதத்தில் முந்தைய பத்து மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 57.7-ஆக சரிந்தது. எனினும், அது கடந்த அக்டோபா் மாதத்தில் 58.5-ஆக மீண்டெழுந்தது. பின்னா் நவம்பரில் 58.5 சதவீதமாகக் குறைந்த அது, டிசம்பரில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 59.3-ஆக எழுச்சி பெற்றது. இருந்தாலும், கடந்த ஜனவரியில் முந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 56.5-ஆகச் சரிந்து, பின்னா் பிப்ரவரியில் 59.0-ஆக எழுச்சி பெற்றது. அதைத் தொடா்ந்து மாா்ச் மாதத்தில் அது மிதமாகச் சரிந்து 58.5 ஆனது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் அது மிதமாக உயா்ந்து 58.7 ஆனது.

இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த மே மாதத்தில் மீண்டும் மிதமான வளா்ச்சி கண்டு 58.8-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இந்திய சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும் ஆரோக்கியமான சூழல் நிலவியது. இதன் விளைவாக அந்தத் துறைக்கான பிஎம்ஐ கடந்த மே மாதத்தில் சற்று அதிகரித்துள்ளது.

இத்துடன், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ தொடா்ந்து 46-ஆவது மாதமாக நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

Previous Post

யு மும்பாவை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்! | Jaipur Patriots beat U Mumba in ultimate table tennis

Next Post

அமெரிக்கா – சீனா வரி தொடர்பான பேச்சு தடைபட்ட நிலையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை | Xi Jinping Donald Trump hold phone talks as US China tariff talks stall

Next Post
அமெரிக்கா – சீனா வரி தொடர்பான பேச்சு தடைபட்ட நிலையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை | Xi Jinping Donald Trump hold phone talks as US China tariff talks stall

அமெரிக்கா - சீனா வரி தொடர்பான பேச்சு தடைபட்ட நிலையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை | Xi Jinping Donald Trump hold phone talks as US China tariff talks stall

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin