Last Updated:
நாளை பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தேர்வு பெற்றன. குவாலிஃபயர் 1 சுற்றில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
இதில் பஞ்சாப் தோல்வி அடைந்தது. ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தை மும்பை அணி வெளியேற்றியது. குவாலிஃபயர் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற சூழலில், மும்பை அணி தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில், நாளை பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த சூழலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முன்னணி பேட்ஸ்மேன் ஆகவும், கீப்பராகவும் இருந்த ஹெய்ன்ரிக் கிளாசன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஹெய்ன்ரிக் கிளாசன்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அவருக்கு 34 வயது ஆகிறது. சர்வதேச அளவில் சுமார் 10 முன்னணி பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். தென்னாப்பிரிக்கா அணிக்காக 4 டெஸ்ட், 60 ஒருநாள் போட்டி மற்றும் 58 டி20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 4 சதமும் 11 அரைசதமும் அடித்துள்ள கிளாசன், சர்வதேச டி20 போட்டிகளில் 5 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்நிலையில், அவர் ஓய்வை அறிவித்திருப்பது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
June 02, 2025 3:35 PM IST


