Last Updated:
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தற்கு கவுதம் கம்பீர் வருத்தம் தெரிவித்தார்.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து இந்திய தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்பட்டது.
இதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்தார்.
“நாங்கள் விளையாடும்போது ரோட் ஷோக்களில் எல்லாம் தனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. இனியும் இருக்காது” எனத் தெரிவித்த கவுதம் கம்பீர், “வெற்றியும் கொண்டாட்டங்களும் முக்கியமானதுதான். ஆனால் அதைவிட மனிதர்களின் உயிர் மிகவும் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இவ்வளவு கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தயாரிப்புகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லையென்றால், அது போன்ற ஒரு ரோட் ஷோ நடக்கக் கூடாது. நாம் அனைவரும் பொறுப்புள்ள ஒரு குடிமக்களாக இருக்க வேண்டும். நம்முடைய செயல்களில் அது தெரிய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மகுடம் சூடியபோது, ரசிகர்கள் பலரும் பெங்களூருவில் வெற்றிக் கொண்டாட்டத்திற்காகக் கூடியதால், 11 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இதையடுத்து இந்தக் கூட்ட நெரிசல் குறித்து சிறப்பு விசாரணைக் குழுவை கர்நாடகா முதலமைச்சர் அமைத்துள்ளார். இதன் அறிக்கை 15 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bangalore,Karnataka
June 05, 2025 10:46 PM IST


