Last Updated:
12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா வர தடை விதித்துள்ளார் டெனால்ட் ட்ரம்ப்.
ஆப்கானிஸ்தான், ஈரான், ஏமன் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதிக்கும் புதிய ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அண்மையில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். புதிய உத்தரவின்படி ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட்(chad), காங்கோ குடியரசு, கினி, எரித்ரியா, ஹைத்தி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமனைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதேபோல் புருண்டி, கியூபா, லாவோஸ், சைரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலாவைச் சேர்ந்தவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் திங்கட்கிழமை முதல் அமலாகும் என்றும் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருவோருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு பைடன் அரசு தடையை நீக்கியது. புதிய கட்டுப்பாடுகளை டிரம்ப் மீண்டும் அமல்படுத்தியுள்ளது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
June 05, 2025 3:33 PM IST
இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பு.. டெனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!


