• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கார் வாங்க பிளான் பண்றீங்களா? உங்களுக்கான டாப் 5 கார் லோன் ஆப்ஷன்கள் இதோ!

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
கார் வாங்க பிளான் பண்றீங்களா? உங்களுக்கான டாப் 5 கார் லோன் ஆப்ஷன்கள் இதோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 05, 2025 2:36 PM IST

சில வங்கிகள் 8 வருடங்கள் வரையிலான கால அவகாசத்தில் வாகனக் கடன்களை வழங்குகின்றன. இந்தப் பதிவில் இந்தியாவில் கிடைக்கக்கூடிய சிறந்த கார் லோன்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.

News18News18
News18

சொந்தமாக ஒரு கார் வாங்கி விட வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கிறது. அது ஸ்போர்ட்ஸ் கார், செடான் அல்லது ஆடம்பர கார் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப ஒரு காரை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். ஒரு காரை வாங்குவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு பல லட்சங்களை செலவு செய்ய வேண்டும். எனவே நடுத்தர குடும்பத்தினரும் அவர்களுடைய ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவே கார் லோன்கள் கிடைக்கின்றன.

வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) சிறந்த வட்டி விகிதங்களில் வாகனக் கடன்களை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு வங்கியைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள் ஆனது மாறுபடும். சில வங்கிகள் 8 வருடங்கள் வரையிலான கால அவகாசத்தில் வாகனக் கடன்களை வழங்குகின்றன. இந்தப் பதிவில் இந்தியாவில் கிடைக்கக்கூடிய சிறந்த கார் லோன்கள் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கார் லோன்:

SBI நியூ கார் லோன் ஸ்கீம், SBI அஷ்யூர்டு கார் லோன் ஸ்கீம், SBI லாயல்டி கார் லோன் ஸ்கீம் மற்றும் எலக்ட்ரிக் கார்களுக்காக கிரீன் கார் லோன் போன்றவை மூலமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாகனக் கடன்களை வழங்கி வருகிறது. தினசரி குறையும் பேலன்ஸ்கள் அடிப்படையில் SBI வங்கி கார் லோன்களை குறைந்த வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. இதில் வாகனத்தின் 90 சதவீத செலவை SBI கார் லோன் மூலமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஃபெடரல் பேங்க் கார் லோன்:

அட்டகாசமான வட்டி விகிதங்களில் வாகனக் கடன்களை வழங்கக் கூடியது ஃபெடரல் வங்கி. வாகனக் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கான கட்டணங்களை இந்த வங்கி வசூல் செய்வது கிடையாது. கடன் பெறுபவரின் வேலை மற்றும் வருமானத்தைப் பொறுத்து வாகனக் கடனுக்கான தொகையானது நிர்ணயிக்கப்படும். மேலும் ஃபெடரல் பேங்க் மூலமாக நீங்கள் பெறும் வாகனக் கடன்களுக்கு 10 லட்ச ரூபாய் வரையிலான இலவச தனிநபர் விபத்துக் காப்பீட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

பேங்க் ஆஃப் பரோடா கார் லோன்:

வீட்டுக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன், கல்விக் கடன் மற்றும் வாகனக் கடன் போன்றவற்றைக் குறைந்த வட்டி விகிதங்களில் வழங்கும் வங்கிகளில் பேங்க் ஆஃப் பரோடா ஒன்று. 21 வயது மற்றும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைந்தபட்சம் 725 கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் பட்சத்தில் வாகனக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை 7 வருடக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை நீங்கள் MUVகள், SUVகள் மற்றும் பயணியர் வாகனங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கனரா வங்கி கார் லோன்:

கனரா வங்கி கார் லோன் மூலமாக நீங்கள் புதிய அல்லது செகண்ட் ஹேண்ட் 4 சக்கர வாகனங்களை வாங்கலாம். ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 3 லட்ச ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு லோன் வழங்கப்படும். அதிகபட்ச லோன் வரம்பு என்பது கடன் பெறுநரின் வருமானத்தைப் பொறுத்து அமையும் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 7 வருடங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும். வாகனச் செலவில் 90 சதவீதத்தை கனரா வங்கி லோனாக வழங்குகிறது. இதில் இன்ஷூரன்ஸ், பதிவுக் கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் அடங்கும்.

ஆக்சிஸ் வங்கி கார் லோன்:

ஆக்சிஸ் வங்கியின் புதிய கார் லோன் என்பது 18 மற்றும் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 8 வருடங்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் முதல் கார் லோனாகப் பெற்றுக் கொள்ளலாம். வாகனத்தின் 100 சதவீத செலவை ஆக்சிஸ் வங்கி ஏற்றுக் கொள்கிறது. கார் லோன் வாங்கும்போது வங்கியில் வழங்கப்படும் வட்டி விகிதங்கள், உங்களுக்குத் தேவையான லோன் வகை, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மற்றும் பிற காரணிகளைக் கருத்தில் கொள்வது அவசியம்.

First Published :

June 05, 2025 2:36 PM IST

Read More

Previous Post

IPL 2025 : ஆர்சிபி அணியின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்.. யார் இந்த ஜேமிசன்?

Next Post

‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை | Pak PM Shehbaz Sharif now wants Trump to facilitate dialogue with India

Next Post
‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ – பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை | Pak PM Shehbaz Sharif now wants Trump to facilitate dialogue with India

‘இந்தியாவை சமாதானப்படுத்த ட்ரம்ப் உதவ வேண்டும்’ - பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரிக்கை | Pak PM Shehbaz Sharif now wants Trump to facilitate dialogue with India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin