• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: தில்லியில் விரைவில் அடுத்த சுற்றுப் பேச்சு

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: தில்லியில் விரைவில் அடுத்த சுற்றுப் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து இந்த வாரம் தில்லியில் அடுத்த சுற்றுப் பேச்சு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அமெரிக்காவுடன் சமநிலை கொண்ட, பரஸ்பரம் பயன் அளிக்கக்கூடிய வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிா்பாா்க்கிறது.

அமெரிக்காவுடனான பிற நாடுகளின் வா்த்தகத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவுக்கு என்ன கிடைக்கிறது என்பதைப் பொருத்து இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரியை மேலும் அதிகரிக்க டிரம்ப் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது, அந்நாட்டின் வரி விதிப்பு முடிவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்ற உத்தரவுக்கு தடை போன்ற காரணங்களால் ஜூலை 9-க்கு முன்பாக இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. எனினும் நாட்டுக்கு எது நல்லதோ, அதற்கான பாதைகளை இந்தியா கண்டறியும்.

ஏற்றுமதிகள் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஷேல் எரிவாயு, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் போன்றவற்றை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்க முடியும்’ என்றாா்.

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தகம் மூலம், 2030-க்குள் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக மதிப்பை 500 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.43 லட்சம் கோடி) அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த மதிப்பு 191 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.16.40 லட்சம் கோடி) உள்ளது.

Read More

Previous Post

இந்தக் கொண்டாட்டம் அவசியமா? – ஆர்சிபி உரிமையாளரை சும்மா விடக்கூடாது: மதன்லால் ஆவேசம் | Former Cricketer Madan Lal slams state govt, RCB owner for bengaluru stampede

Next Post

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில் | ”I am neither Pakistani nor American” – Shashi Tharoor interview in America

Next Post
இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில் | ”I am neither Pakistani nor American” – Shashi Tharoor interview in America

இந்தியா - பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? - அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில் | ''I am neither Pakistani nor American'' - Shashi Tharoor interview in America

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin