• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் ஊழியர்: பொது போக்குவரத்தில் கூரியர் சேவை

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 2 mins read
0
முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் ஊழியர்: பொது போக்குவரத்தில் கூரியர் சேவை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Singapore Worker inspire story: சிங்கப்பூரில் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட 43 வயதான சிங்கப்பூர் ஊழியர் ஒருவர் சொந்தமாக கூரியர் சேவையை நடத்தி வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல், பார்சல்களை விநியோகம் செய்வதற்கு அவர் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு

அயீத் என்று அழைக்கப்படும் முகமது ஜாஹித் பின் முகமது யாசின் என்ற ஊழியர், மோட்டார் சக்கர நாற்காலியில் டெலிவரி செய்வது, உழைக்கும் வர்க்கத்துக்கும் வாழ்க்கையில் முன்னேற துடிப்போருக்கும் பெரும் தூண்டுதலாய் அமைந்துள்ளது.

பொங்கோலில் வசிக்கும் அவர், தனது வீட்டிலிருந்து சிங்கப்பூரின் மூலை முடுக்குகளுக்கும் பயணம் செய்து உணவு, பைகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் ஒரு முறை மைக்ரோவேவ் கூட டெலிவரி செய்துள்ளார்.

டெலிவரிக்கு செல்லும் வழியில் அவர் மதர்ஷிப் தளத்துடன் பேசியதாக அது பகிர்ந்துள்ளது, மேலும் இந்த சேவையை முதலில் எவ்வாறு தொடங்கினார் என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கல்வி

முதுகுத்தண்டு பாதிப்பு காரணமாக அயீத் 15 வயதில் இரண்டு கால்களையும் இழந்தார். ஆனால் அது அவரது கல்விக்கு தடையாய் அமையவில்லை.

வாழ்க்கையில் பெரும் சவால்கள் இருந்தபோதிலும், அவர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ITE) படித்தார்.

திருப்புமுனை

கடந்த 2016 ஆம் ஆண்டில், அயீதின் வாழ்க்கையில் மற்றொரு திருப்பு முனை ஏற்பட்டது. ஒரே மாதத்தில் மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவர் முழுநேரம் வேலை செய்வதற்கான தகுதியை இழந்ததாக சான்றளிக்கப்பட்டார்.

அடிக்கடி வேலைக்கு வராமல் இருப்பது நியாயமற்றது என்பதை உணர்ந்த அவர், வாடிக்கையாளர் சேவையில் தனது வேலையை துறந்தார்.

அவர் தனது நிலையான வருமானத்தை இழப்பது கடினமாக இருந்தாலும், தனி சுதந்திரத்தை இழப்பதும் அவருக்கு மிகவும் தொந்தரவாக அமைந்தது.

சிங்கப்பூர் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பதிவுகளுக்கு அபராதம் – எச்சரிக்கை

தனது தாயாரை பராமரிக்க வேண்டும்

அயீத் தனது குடும்பத்தை, குறிப்பாக பிறந்ததிலிருந்தே தன்னைப் பராமரித்து வந்த தனது தாயாரை பராமரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஒரு நாள், அவர் தற்செயலாக ஒரு பேஸ்புக் குழுவை பார்வையிட்டார், அங்கு டெலிவரி வேண்டி பயனர்கள் பதிவுவிட்டதைக் கண்டார்.

Photo courtesy of Ayeed

இதனால் ஈர்க்கப்பட்ட அவர், பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் அவரின் சுயாதீன டெலிவரி சேவையை விளம்பரப்படுத்தினார்.

டெலிவரி செய்வதை சுதந்திரமாக செய்ய விரும்பிய அவர், தனக்கான வேலை அட்டவணையை அவர் சொந்தமாக அமைத்துக் கொண்டார், அதனால் முக்கிய விநியோக நிறுவனங்களில் அவர் சேர விரும்பவில்லை.

ஆறு முதல் எட்டு டெலிவரி

இன்று, அவர் பொதுப் போக்குவரத்தையும், மோட்டார் பொருத்தப்பட்ட தன்னுடைய சக்கர நாற்காலியையும் பயன்படுத்தி தீவைச் சுற்றி டெலிவரி செய்து வருகிறார்.

அவர் டெலிவரிக்காக மேற்கொண்ட பயணத்தில் மிக நீண்ட பயணம் துவாஸிலிருந்து தெம்பனீஸ் வரையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo from Ayeed the Courier/Facebook

அவரது பரபரப்பான நாட்களில் ஒன்று, ஐந்து மணி நேரத்திற்குள் 10 டெலிவரிகளை முடித்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரே நாளில் 17 டெலிவரிகளை அவர் சிறப்பாகச் செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், சராசரியாக அவர் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு டெலிவரிகளை செய்வார்.

டெலிவரியின் தூரம் மற்றும் நேர காலத்தை பொறுத்து வாடிக்கையாளர்களுக்கு S$10 முதல் S$15 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வேலை இலகுவானது இல்லை

ஆனால், இந்த வேலை இலகுவானது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். சில நேரங்களில் சாய்வுதள வசதி இல்லாத HDB புளாக்குகளில் படிக்கட்டுகள் வழியாக மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை வரும்போது அவரின் வேலையில் தடை ஏற்படுவதாக கூறுகிறார்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புரிந்துகொண்டாலும், ஒரு சிலர் அதனை விரும்புவதில்லை என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது டெலிவரி சேவையைத் தொடங்கி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகின்றன, ஆனாலும் கூட அயீத் இன்னும் உறுதியோடு செயல்பட்டு வருகிறார்.

பரிதாபம் காட்டுவதை அவர் விரும்பவில்லை

வாடிக்கையாளர்களின் புரிதலை அவர் நம்பினாலும், அவர் மீது காட்டப்படும் எந்த பரிதாபத்தையும் அயீத் விரும்பவில்லை.

மற்ற கூரியர் ஊழியர்களைப் போலவே தன்னையும் மக்கள் நடத்த வேண்டும் என்பதே ஆயீத்தின் பெரும் நம்பிக்கை.

காரணம் கூறி உழைக்க மறுக்கும் கூட்டத்துக்கு இவர் ஒரு வாழும் உதாரணம்.

சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

Read More

Previous Post

“இந்த 12 நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் இனி நுழைய முடியாது..” – ட்ரம்ப் அறிவிப்பு; என்ன காரணம்?

Next Post

சிறிலங்கா எயார்லைன்ஸின் புதிய விமானத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தொகை இதுதான்.!

Next Post
சிறிலங்கா எயார்லைன்ஸின் புதிய விமானத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தொகை இதுதான்.!

சிறிலங்கா எயார்லைன்ஸின் புதிய விமானத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தொகை இதுதான்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin