Last Updated:
இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன், அவரது மகன்கள் சித்தார்த், சிவம் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்துள்ள இந்திய ராணுவத்துக்கு ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் 28 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அதிரடித் தாக்குதல் நடத்தியது. “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது.
அதிரடித் தாக்குதலுக்குப் பின்னர் சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த “ஆபரேஷன் சிந்தூரில்” இந்திய ராணுவம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வந்தன. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று நிறைவுபெற்ற சூழலில் இந்திய ராணுவத்துக்கு மரியாதை செய்யப்பட்டது.
இதனையொட்டி இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன், அவரது மகன்கள் சித்தார்த், சிவம் ஆகியோர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் நாட்டுப்பற்றை ஏற்படுத்தக்கூடிய “வந்தே மாதரம்” உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன. இது தொடர்பாக ஐபிஎல் சமூக வலைதளக் கணக்குகளில் வெளியிடப்பட்ட வீடியோ அதிக விருப்பங்களைப் பெற்று வருகிறது.
June 03, 2025 10:44 PM IST


