Last Updated:
ஜெர்மனியின் கலோன் நகரில் 2-ஆம் உலகப் போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, அப்பகுதியில் இருந்து 20,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஜெர்மனியின் கலோன் நகரில் 2-ஆம் உலகப் போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. இது 20 டன் மற்றும் 10 டன் எடை கொண்ட அமெரிக்க குண்டுகள் என்று சொல்லப்படுகிறது. இது முழு நகரத்தையும் ஆபத்தில் ஆழ்த்தியது.
20,000 பேர் வெளியேற்றம்
தொழிலாளர்கள் இந்த அமெரிக்க குண்டுகளை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 20,000 மக்கள் வேறு பகுதிக்குப் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து 3 அமெரிக்க குண்டுகளையும் செயலிழக்கச் செய்யும் வேலையை அதிகாரிகள் தொடங்கினர்.

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு கலோனில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள வீடுகள், 58 ஹோட்டல்கள், 9 பள்ளிகள், அலுவலகக் கட்டடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதை தொடர்ந்து, வெடிக்காத 3 அமெரிக்க குண்டுகளையும் அதிகாரிகள் பத்திரமாக செயலிழக்கச் செய்தனர்.
80 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள்
2ஆம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகும், போரில் வான்வழித் தாக்குதல்களின் போது வீசப்பட்ட குண்டுகள், ஜெர்மனியின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
June 05, 2025 8:52 AM IST
80 ஆண்டுகளுக்கு பின்.. 2-ம் உலகப் போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுப்பு!


