• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 Final : ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு காரணம் பவுலர்கள்தான்.. விராட் கோலி பாராட்டு

GenevaTimes by GenevaTimes
June 5, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2025 Final : ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு காரணம் பவுலர்கள்தான்.. விராட் கோலி பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


“கடைசி இரண்டு ஓவர்களில் AB எல்லை கோட்டில் இருந்தது இந்த வெற்றியை இன்னும் சிறப்பாக்கியது. நான் அவரிடம், ‘நான் போய் அழவேண்டிய நிலை. இது எனக்குத் தாங்க முடியவில்லை’னு சொன்னேன். அந்த கடைசி மூன்று பந்துகளில் கண்ணீர் வரும் அளவுக்கு உணர்ச்சி கொந்தளித்தது—அதை AB தான் உணர்ந்து இருப்பார். AB, Chris—இவர்கள் என் வாழ்க்கையின் சிறந்த ஆண்டுகளில் என்னுடன் இருந்தவர்கள். நாங்கள் ஒன்றாக நிறைய முயற்சிகள் செய்தோம், பல முறை நெருக்கத்தில் தோல்வியடைந்தோம். ஆனால் இப்போது, இந்த வெற்றியை அவர்களுடன் பகிர்வது எனக்குப் பெருமை. இது என்னுடையது மட்டும் இல்ல, அவர்களுடையதும் கூட.

“அவர்கள் பெங்களூருவில் காலடி எடுக்கும் போதெல்லாம் ரசிகர்கள் காட்டும் அன்பு வியப்பூட்டும். ஏனெனில், அவர்கள் இந்த அணிக்காக உள்ளமும் உயிரும் கொடுத்தார்கள். அந்த முயற்சிக்கு இந்த டைட்டில் ஒரு மரியாதை. இது அவர்களுக்கான வெற்றியும் தான்.”

“இந்த ஆண்டு டிரஸிங் ரூமில் இருந்த வீரர்களின் மனோபாவமே தனி அளவானது. AB கூட என்னிடம் சொன்னார், ‘இந்த அணியில் ஒரு விசித்திரமான உற்சாகம் இருக்குது’னு. Jitesh, Rajat, Mayank, Devdutt—யாரும் எதிர்பார்க்காத வீரர்கள். எல்லோருடைய கண்களிலும் ஒரு அமைதியான தைரியம் இருந்தது. அவர்களுக்கு இந்த டைட்டில் ரொம்பவே வேண்டியது.

“ஆனால் உண்மையா சொல்றேன், இந்த டைட்டிலை நமக்கு வெல்ல வைத்தது நம் பவுலர்கள்தான். எப்போதுமே ரன் அடித்து வெற்றிபெறக்கூடிய அணியாகவே RCB-யை ரசிகர்கள் நினைக்கிறார்கள். ஆனா இந்த சீசன், நம்ம பவுலர்களால்தான் நம்ம லீக் திரும்பி வென்றோம். ஒவ்வொரு பவுலரும் தங்களுடைய பங்கை சரியாக செய்தார்கள். குறிப்பாக Krunal Pandya எடுத்த இரண்டு முக்கியமான விக்கெட்டுகள்—அவருடைய ஸ்பெல் இன்னும் நீண்ட நாட்கள் பேசப்படும். ஒரு finger-spinner ஆக அவ்வளவு அழுத்தத்தில் அப்படிப்பட்ட ஸ்பெல் வீசுவது அபாரமானது. இது ஒரு முழு அணியின் வெற்றி.”

“நான் உடனே சொன்னேன்—இந்த வெற்றி நமக்கு மட்டும் இல்ல, நம்ம ரசிகர்களுக்குமே சமமாக இருக்கிறது. அவர்கள் 18 ஆண்டுகளாக எங்களை ஆதரித்து வந்தார்கள். சில சீசன்கள் மோசமாக இருந்தாலும், சில நல்ல தருணங்களும் இருந்தாலும், அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பெங்களூருவில் நம்முடன் இருந்தார்கள். நான் கிரிக்கெட்டில் இப்படிப்பட்ட விசுவாசத்தைப் பார்த்ததேயில்லை. அதனால்தான் நான் RCB-யை ஒருபோதும் விட்டு செல்லல. இதுவே இந்த வெற்றியை மிகவும் உணர்ச்சிவயமாக்குகிறது. அவர்கள் உண்மையிலேயே ‘Loyally Royal’.”

அனைத்திற்கும் மேலாக தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிடமிருந்து கிடைத்த ஆதர்வைப் பற்றி கோலி கூறியதாவது:

“அவர் 2014 முதல் RCB-யை ஆதரிக்க வருகிறார்—அவருக்கும்கூட இப்போ 11 ஆண்டு அனுபவம். கடினமான நேரங்களில், தோல்விகளிலும், எப்போதுமே அவள் எனக்கு துணையாக இருந்தார். ஒரு வாழ்க்கை துணை செய்யும் தியாகங்களும், மன அழுத்தங்களிலும் உங்களை நிலைநிறுத்துவதும்—அது சொல்லக்கூடியது இல்ல.

“ஒரு ப்ரொஃபஷனல் ஸ்போர்ட்ஸ்மேனாக அவர் என்ன சந்திக்கிறேனோ எல்லாம் பார்த்திருக்கிறாள். என் மோசமான தருணங்களை அவள் பார்த்திருக்கிறாள். ஆனா ஒருபோதும் பின் வாங்கவில்லை. இந்த வெற்றி அவருக்கும் அதே அளவுக்கு முக்கியமானது. அவள் நிச்சயமாக பெருமையாக இருப்பாள்.”

JioStar நிபுணர் மெத்தியூ ஹேடன் கூறியதாவது:

“விராட் இந்த ஃபிராஞ்சைஸுக்குக் காட்டும் மரியாதை அபாரமானது. அவர் தனது இளமை, இதயம், ஆன்மா—எல்லாவற்றையும் RCBக்கு அர்ப்பணித்திருக்கிறார். அவர் முன்னாள் வீரர்களான AB de Villiers, Universe Boss Chris Gayle, Shane Watson—இவர்கள் வெற்றியை பெற முடியாமல் இருந்தார்கள்.

ஆனா இப்போது, விராட் அந்த மரியாதையை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம், அவர் IPL-இல் ‘மன்னன்’ ஆகிறார். இது ரசிகர்களுக்கான வெற்றியும் கூட. அவர்கள் எப்போதும் நம்பிக்கையுடன் இருந்ததால்தான் இது சாத்தியமானது.”

JioStar நிபுணர் சஞ்சய் பாங்கார் கூறியதாவது:

“இந்த ஆண்டு RCB அனுபவமிக்க வீரர்களை அதிகம் நம்பியது. முந்தைய ஆண்டுகளில் அபாரமான திறமை உள்ள இளம் வீரர்கள் இருந்தார்கள், ஆனால் சர்வதேச அளவில் அதிக அனுபவம் இல்லை. இந்த சீசனில் Devdutt Padikkal, Jitesh Sharma, Rajat Patidar, Yash Dayal ஆகியோர் அனைவரும் ஒருமுறைதான் இருந்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றவர்கள். அந்த அனுபவமே அழுத்த தருணங்களில் சிந்தனையை தெளிவாக வைத்தது.

“அதனுடன், Bhuvneshwar Kumar மற்றும் Josh Hazlewood போன்ற முக்கியமான சேர்க்கைகள் மிகச் சிறந்தவை. குறிப்பாக புவனேஸ்வர் குமார், IPL-இல் மிகச் சிறந்த பவுலர்களில் ஒருவர். அந்த தேர்வு மிகச் சிறந்த முடிவாக அமைந்தது. இந்த முடிவுகள் எல்லாம் சேர்ந்து இந்த ஆண்டில் RCBயை சரியான அணியாக மாற்றின, கடந்த ஆண்டுகளில் அவர்கள் எட்டாத உயரத்தை எட்ட வைத்தன.” என்று தெரிவித்தார்

First Published :

June 04, 2025 4:26 PM IST

Read More

Previous Post

நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் பெட்டி பராமரிப்பு கிடங்கு… கட்டுமானப் பணிகள் தீவிரம்…! எங்கே தெரியுமா…?

Next Post

இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்த விரிவாக்கம்: பராகுவே அதிபா் நம்பிக்கை

Next Post
இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்த விரிவாக்கம்: பராகுவே அதிபா் நம்பிக்கை

இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்த விரிவாக்கம்: பராகுவே அதிபா் நம்பிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin