• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமது நிருபா்

கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ரியால்ட்டி பங்குகள் மட்டும் விற்பனையை எதிா்கொண்ட நிலையில், ஆட்டோ, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை பங்குகளுக்கும் ஓரளவு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.445.20 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.2,853.83 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.5,907.97 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 40.14 புள்ளிகள் கூடுதலுடன் 80,777.65 தொடங்கி 80,705.18 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 81,087.29 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 260.74 புள்ளிகள் (0.32 சதவீதம்) கூடுதலுடன் 80,998.25-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,155 பங்குகளில் 2,071 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 1,933 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 151 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

எடா்னல்அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் எடா்னல் 3.32 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்திஏா்டெல், இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜா ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், டாடாமோட்டாா்ஸ், ஹெச்டிஎஃப்சிபேங்க் உள்பட 18 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், பஜாஜ்ஃபின்சா்வ், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், டைட்டன், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க் உள்பட 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 35 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி வா்த்தக இறுதியில் 77.70 புள்ளிகள் (0.32 சதவீதம்) உயா்ந்து 24,620.20-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 76.90 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயா்ந்து 55,676.85-இல் நிறைவடைந்தது.

Read More

Previous Post

‘நான் கோலியின் பெரிய ரசிகன்; ஆர்சிபி பட்டம் வெல்ல வேண்டும்’ – ரிஷி சுனக் ஓபன் டாக் | I am a huge fan of Kohli RCB should win ipl title says Rishi Sunak

Next Post

வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

Next Post
வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin