Last Updated:
மதுரையின் பேமஸான மல்லிகை பூவின் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் வெறும் 250 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவது வியாபாரிகளை கவலை தெரிவித்தனர்.
என்னடா மதுரை மல்லிக்கு வந்த சோதனை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே மதுரையின் பேமஸான மல்லிகை பூ வெறும் 250 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மண் மணக்கும் மதுரை மாநகரில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் உசிலம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் ஏக்கர் கணக்கில் மல்லிகை விளைச்சல் நடைபெறும். இங்கு விளைவிக்கப்படும் மல்லிகை பூவின் நறுமணம் மற்றும் தன்மை பொறுத்துதான் மதுரை மல்லி ஃபேமஸ் என்று சொல்லப்படுகின்றது. மதுரைக்கு மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளுக்கும் மதுரை மல்லி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் மதுரை மல்லிகை பூவின் விளைச்சல் குறைவாக இருக்கும் பொழுது 3000 இலிருந்து கிட்டத்தட்ட 6000 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதுண்டு. ஆனால் அதே சமயம் மல்லிகை பூவின் விளைச்சல் அதிகரித்தால் வெறும் 100 லிருந்து 300 ரூபாய் வரைக்கும் மட்டுமே விற்பனை செய்யப்படுவதும் உண்டு.
இதனை அடுத்து சித்திரை மாத வெயில் ஒரு பக்கம் இருந்தாலும், கோடைகால பருவ மழை பெய்து வருவதினால் மதுரையில் மல்லிகை பூவின் விளைச்சல் மிகவும் அதிகமாக காணப்பட்டு வருகின்றது. இதனால் சந்தையில் மல்லிகை பூவின் விலை வெறும் 250 இல் இருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள்.
அதாவது டன் கணக்கில் மல்லிகை பூவின் விளைச்சல் இருந்தாலும் சந்தைகளில் பூக்களின் விலை அடிமட்டத்திற்கு விற்பனை செய்யப்படுவதினால் விவசாயிகளுக்கு அதிக லாபம் பெறுவதில் கஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
அதேபோல், பிச்சி ரூ.300, முல்லை ரூ.350, செவ்வந்தி ரூ.100, சம்பங்கி ரூ.100, செண்டு மல்லி ரூ.60, கனகாம்பரம் ரூ.3000, ரோஸ் ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.100, பன்னீர் ரோஸ் ரூ.1500, கோழிக்கொண்டை ரூ.30, அரளி ரூ.200, தாமரை (ஒன்றுக்கு) ரூ.10 என மற்ற பூக்களின் விலையும் குறைந்தே விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.இனி பருவமழை மற்றும் சுபமுகூர்த்தத்தை பொறுத்து தான் மல்லிகை பூவின் விலை ஏற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Madurai,Madurai,Tamil Nadu
June 04, 2025 10:42 AM IST

