• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பணத்தை திறமையாக கையாளுவதற்கு பண உளவியல் கூறும் 10 ரகசியங்கள்…! அவசியம் தெரிஞ்சுக்கோங்க…

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பணத்தை திறமையாக கையாளுவதற்கு பண உளவியல் கூறும் 10 ரகசியங்கள்…! அவசியம் தெரிஞ்சுக்கோங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 04, 2025 6:02 PM IST

நீங்கள் மாதந்தோறும் ரூ.10,000 சம்பாதித்தாலும் சரி அல்லது 10 லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி, பணத்தை கையாளுவதற்கான சில வாழ்க்கைப் பாடங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

News18News18
News18

பணத்தை கையாளுவது என்பது வெறும் எண்கள், அட்டவணைகள் அல்லது நிபுணர் ஆலோசனையைப் பொறுத்தது அல்ல. நாம் எப்படி யோசிக்கிறோம், என்ன உணர்கிறோம் மற்றும் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்தது. பணத்தின் உளவியலைப் பொறுத்தவரை, தர்க்கம் அல்லது அறிவுத்திறனை காட்டிலும் நம்முடைய தனிப்பட்ட அனுபவங்கள் நமது பொருளாதார முடிவுகளை வடிவமைக்கும்.

நீங்கள் மாதந்தோறும் ரூ.10,000 சம்பாதித்தாலும் சரி அல்லது 10 லட்சம் ரூபாய் சம்பாதித்தாலும் சரி, பணத்தை கையாளுவதற்கான சில வாழ்க்கைப் பாடங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

  • வெற்றி அல்லது தோல்வியை முடிவின் அடிப்படையில் எப்பொழுதும் புரிந்துகொள்ளாதீர்கள். பில்கேட்ஸ் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம். ஆனால், அவரைப் போலவே ஸ்மார்ட்டாக இருந்த வேறு ஒருவர் துரதிர்ஷ்டம் காரணமாக தோற்றுப் போயிருக்கலாம்.
  • சிறு சிறு எண்ணிக்கையிலான நிகழ்வுகள் சிறந்த முடிவுகளை உருவாக்கும். இது முதலீடாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி. எனவே, எப்பொழுதும் தினசரி ஏற்ற இறக்கங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக நீண்ட கால தாக்கத்தில் கவனம் செலுத்துங்கள்.
  • பணத்தை சேமிப்பதற்கு உங்களுக்கு காரணம் தேவையில்லை. எதிர்காலம் என்பது யாராலும் கணிக்க முடியாதது. சேமிப்பு உங்களுக்கு சுதந்திரம் மற்றும் பல்வேறு ஆப்ஷன்களை வழங்குகிறது.
  • பணமானது பல்வேறு விஷயங்களுக்கான கட்டுப்பாட்டை வழங்குகிற காரணத்தால், அது மிகவும் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. எனவே, இதுவே உண்மையான செல்வம், அதிகப்படியான பொருட்களை வைத்திருப்பது அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • ரிஸ்க் எடுத்தால் மட்டுமே செல்வத்தை அதிகரிக்க முடியும். அதே நேரத்தில் தொடர்ந்து அந்த செல்வத்தை தக்க வைப்பதற்கு உங்களிடம் பணிவு, பொறுமை போன்றவை கட்டாயம் இருக்க வேண்டும்.
  • வாரன் பஃபெட் ஒரே இரவில் பணக்காரராக மாறிவிடவில்லை. அவருடைய உண்மையான ரகசியம் என்ன தெரியுமா? நேரம் மற்றும் தொடர்ச்சியான முயற்சி. எனவே, முடிந்தவரை எவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்க முடியுமோ ஆரம்பியுங்கள், தொடர்ச்சியாக முதலீடுகளை செய்யுங்கள்.
  • ‘பர்ஃபெக்ட்டான’ அல்லது ‘சிறந்த’ பொருளாதார திட்டம் உங்களுக்குத் தேவை இல்லை. எது சரியானது மற்றும் உங்களுக்குச் சௌகரியமானது என்பதைத் தேர்வு செய்யுங்கள், அதையே பின்பற்றுங்கள்.
  • வருமானம் அதிகரிக்க அதிகரிக்க நாம் அளவுக்கு அதிகமாக செலவு செய்ய ஆரம்பிப்போம். எனினும், அவ்வாறு இருக்காமல் உங்களுடைய செலவுகளைக் கண்காணியுங்கள்.

  • பிறருடைய பொருளாதார திட்டங்களைப் பின்பற்ற முயற்சி செய்யாதீர்கள். உங்களுடைய இலக்குகள், காலக்கெடு மற்றும் சௌகரியம் போன்றவை தனிப்பட்டதாக இருக்கும்.
  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ எனவே, உங்களுக்குப் போதுமானது எது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது போதவில்லை என்றே உங்களுக்குத் தோன்றும்.

First Published :

June 04, 2025 6:02 PM IST

Read More

Previous Post

சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த ஆர்சிபி: IPL Finals டாப் 10 தருணங்கள்! | top 10 moments of ipl finals rcb versus pbks

Next Post

சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன்: இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாகிஸ்தானில் மர்ம மரணம் | Jaish terrorist dies mysteriously in Pakistan

Next Post
சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன்: இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாகிஸ்தானில் மர்ம மரணம் | Jaish terrorist dies mysteriously in Pakistan

சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன்: இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாகிஸ்தானில் மர்ம மரணம் | Jaish terrorist dies mysteriously in Pakistan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin