• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வலுவான குஜராத் அணியை தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ்… கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பு… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 4, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
வலுவான குஜராத் அணியை தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ்… கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பு… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குஜராத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த போட்டியில் ஆட்டம் கடைசி ஓவர் வரை நீடித்ததால் பரபரப்பு காணப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17ஆவது போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

விளம்பரம்

11 ரன்களில் சாஹா வெளியேற அடுத்து வந்த வில்லியம்சன் 26 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 33 ரன்களும் ராகுல் தெவாட்டியா 23 ரன்களும் சேர்த்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் சுப்மான் கில் 48 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். கேப்டன் ஷிகர் தவான் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

ஜானி பேர்ஸ்டோ 22 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களும் எடுத்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஷஷாங்க் சிங் வெறும் 29 பந்துகளில் 4 சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 61 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவருக்கு உறுதுணையாக அசுதோஷ் சர்மா 31 ரன்கள் சேர்த்தார்.

19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் அணி பாயிண்ட்ஸ் டேபிளில் 5-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Next Post

EB பில் ரொம்ப குறைவா வரும்… இலவசமாக சோலார் பேனல் வேண்டுமா? வாய்ப்பு தரும் நிறுவனம்

Next Post
EB பில் ரொம்ப குறைவா வரும்… இலவசமாக சோலார் பேனல் வேண்டுமா? வாய்ப்பு தரும் நிறுவனம்

EB பில் ரொம்ப குறைவா வரும்... இலவசமாக சோலார் பேனல் வேண்டுமா? வாய்ப்பு தரும் நிறுவனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin