• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

வைபய் சூர்யவன்ஷி முதல் சாய் சுதர்ஷன் வரை..! ஐபிஎல் தொடரில் யாருக்கு என்ன பரிசு?

GenevaTimes by GenevaTimes
June 4, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
வைபய் சூர்யவன்ஷி முதல் சாய் சுதர்ஷன் வரை..! ஐபிஎல் தொடரில் யாருக்கு என்ன பரிசு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தப் பரபரப்பான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி வீரர்களும், அதன் முக்கிய நட்சத்திரமான விராட் கோலியும் கோப்பையை முத்தமிட்டனர். இதையடுத்து இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு ரூ.20 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரூ.13 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் மூன்றாவது இடம்பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், நான்காவது இடம்பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

15 போட்டிகளில் 759 ரன்களை விளாசிய சாய் சுதர்சனுக்கு ஆரஞ்ச் தொப்பி வழங்கப்பட்டது.

15 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஷீத் கிருஷ்ணாவுக்கு பர்ப்பிள் தொப்பி வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய க்ருணால் பாண்டியாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த சீசனின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது சாய் சுதர்சனுக்கு வழங்கப்பட்டது.

இந்த சீசனில் அதிரடியாக விளையாடியதற்கான சூப்பர்-ஸ்ட்ரைக்கர் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு வழங்கப்பட்டது.

கனவு அணிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றதற்காக இந்த சீசனின் ‘பேண்டஸி கிங்’ விருது சாய் சுதர்சனுக்குக் கொடுக்கப்பட்டது. கனவு அணியில் அவர் 1495 புள்ளிகளை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 போட்டிகளில் 40 சிக்சர்களை விளாசியதற்காக, அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற விருதை நிகோலஸ் பூரண் பெற்றார்.

15 போட்டிகளில் 87 பவுண்டரிகள் விளாசியதற்காக ‘அதிக பவுண்டரி அடித்த வீரர்’ என்ற விருதை சாய் சுதர்ஷன் வென்றார்.

இந்த ஐபிஎல் போட்டியில், 151 டாட் பந்துகளை வீசியதற்காக அதிக டாட் பால் வீசியதற்கான விருது முகமது சிராஜுக்கு வழங்கப்பட்டது.

கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் கமிந்து மெண்டிஸ் பிடித்த கேட்ச், இந்த சீசனின் சிறப்பான கேட்ச்சாகத் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு ‘கேட்ச் ஆஃப் தி சீசன்’ விருது கொடுக்கப்பட்டது.

பேர் பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. மேலும் 16 போட்டிகளில் 717 ரன்களை விளாசியதற்காக சூர்யகுமார் யாதவ்விற்கு மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான விருது கொடுக்கப்பட்டது.

Location :

Ahmedabad,Gujarat

First Published :

June 04, 2025 9:46 AM IST

Read More

Previous Post

மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

Next Post

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக இந்தியன் வங்கி சார்பில் புதிய சேமிப்பு கணக்குகள் | Indian Bank launches new savings accounts for overseas Indians

Next Post
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக இந்தியன் வங்கி சார்பில் புதிய சேமிப்பு கணக்குகள் | Indian Bank launches new savings accounts for overseas Indians

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக இந்தியன் வங்கி சார்பில் புதிய சேமிப்பு கணக்குகள் | Indian Bank launches new savings accounts for overseas Indians

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin